ஆரம்பகாலத்தில் இருந்தே தனது படங்களில் அதிரடி சண்டை காட்சிகள் மூலம் ஆக்சன் ஹீரோவாக மக்கள் மத்தியில் வலம் வந்தவர் தான் நடிகர் விஷால். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் தான் வீரமே வாகை சூடும் படம்.
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலே அவரது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் சுமார் 10.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளாராம். படம் வெளியாகும் முன்பே ஓரளவிற்கு லாபம் பார்த்திருந்தாலும், படம் வெளியாவதில் பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளதாம்.
ஆம் ஊரடங்கு மற்றும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் அனுமதி காரணமாக வலிமை, ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் பின்வாங்கியதால் தற்போது வீரமே வாகை சூடும் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை.
ஆனால் தற்போது விஷால் படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். ஒருவேளை அப்படியே படம் வெளியானாலும் தியேட்டரில் ஃபுல் ஷோ கிடையாதாம். எப்படி பார்த்தாலும் படம் வசூல் ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இதனால் தற்போது என்ன செய்வதென தெரியாமல் விஷால் புலம்பி வருகிறாராம்.
![veeramay-vaagai-sudum](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/09/veeramay-vaagai-sudum.jpg)