புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஷாலுக்கு என்னதான் ஆச்சு.? உடல் நடுக்கத்திற்கு அடுக்கடுக்காக வெளிவரும் காரணங்கள்

மத கஜ ராஜா பட புரமோஷனுக்கு வந்த விஷால் மேடையில் குளிர் தாங்காமல் கை, கால் நடுங்கியது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

முதலில் இவ்வளவு பிரச்சனை இருந்தும் ஏன் படக் குழுவினர் அவரை கூப்பிட்டு வரவேண்டும், சுந்தர் C செய்த மிகப்பெரிய தவறு. வைரல் ஃபீவர் இருப்பதாக கூறிய பின் பப்ளிக்கா குஷ்பூவை ஏன் முத்தமிட வேண்டும்? ஒரு மாஸ்க் கூட போடல!

ஒரு புரிதல் இல்லாமல் செய்த செயல் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை தாண்டி பாலாவின் அவன் இவன் படத்தில் கண் விழிகளை மாற்றி நடித்ததால் தற்போது வரை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் எடுக்கப்பட்ட மருந்து, கெட்ட பழக்கவழக்கங்கள் இவரின் உடல் நடுக்கத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

விஷாலின் உயிர் பிரியாத நண்பர்கள் ராணா, நந்தா இருவரும் கூடவே இருந்து யாரையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டதும் கூட உடல்நிலை மோசமாவதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

சங்கத் தலைவரான பின் பல பஞ்சாயத்துகளை பார்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறார் விஷால். இதனை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.

புகழின் உச்சத்தை பார்த்த விஷால் இந்த உடல்நிலை சரியாகி மீண்டு வர வேண்டும் என்று நேற்று முதல் கடவுளிடம் வேண்டுதலாக வைத்து வருகிறார்களாம் நெருங்கிய நண்பர்கள்.

Trending News