வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷால் நடிப்பில் வெற்றி கண்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. ஒவ்வொன்றும் முரட்டு கதாபாத்திரம் ஆச்சே.!

கடந்த மாதம் 29ஆம் தேதி, 44-வது பிறந்த நாளை நண்பர்களோடும் ஆதரவற்ற குழந்தைகளோடும் கொண்டாடினார் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால். கடந்த முறை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவருக்கு இந்த முறை அத்தனை பணிப்பழு இல்லாததால் கொஞ்சம் நடிப்பின் பக்கம் தன் பார்வையை தொடர்ந்துள்ளார்.

தமிழில் 34 படங்கள் நடித்து மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தன் நடிப்பை துவங்கியது குழந்தை நட்சத்திரமாகத்தான். தொடர்ந்து வேதம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருக்கு செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் கிடைத்தது. விரைப்பான சி.பி.ஐ அதிகாரியாக வலம் வந்தவரை யாரும அத்தனை எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் சில சூடான ஹிட் படங்களை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.

சண்டக்கோழி: 2005-ல் வெளிவந்த சண்டைக்கோழி ராஜ்கிரன் விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமியின் அழகிய படைப்பாக அமைந்தது என்றால் சரிதான். குடும்ப படங்களை இயக்கி வந்த லிங்கு சாமிக்கும் நல்ல ஆக்சன் ப்ளாக்பஸ்டராக அமைந்தது சண்டைக்கோழி.

தாமிரபரணி: 2007-ல் ஹரி இயக்கத்தில் விஷால் பானு பிரபு நதியா நடிப்பில் ஒரு மாஸ் படமாக அமைந்தது தாமிரபரணி வழக்கமான ஹரி படங்களுக்கான அடையாளத்தோடு அடுக்கு வசனங்கள் தூத்துக்குடி காரசாரங்கள் என அட்டகாசமான வெற்றி கண்டது படம்.

பாண்டிய நாடு: இயக்கனர் சசீந்திரன் இயக்கத்தில் மதுரையின் பக்கங்களை எடுத்துக்காட்டிய இப்படம் தல நடித்த ஆரம்பம் கார்த்தி நடிப்பில் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்கு போட்டியாகா அமைந்தது.

vishal-lakshmi-menon-cinemapettai
vishal-lakshmi-menon-cinemapettai

மருது: இயக்குனர் முத்தையாவின் வழக்கமான கதைகளை போலவே இப்படமும் அப்பத்தா மற்றும் பேரனின் பாசத்தை எடுத்துக்காட்டி இருந்தது அடுத்து மாமனார் மற்றும் மருமகன் உறவின் பாசத்தை எடுத்துரைத்தது.

இரும்புத்திரை: அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரனின் முதல் படமே ப்ளாக்பஸ்டராக அமைந்தது. ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக தோன்றி அசத்தியிருந்தார். சமூகத்தில் நடக்கும் பல்வேறு விடயங்களையும் தனிநபர்களின் ப்ரைவசியை பாதிக்கும் ஸ்மார்ட் போன் செயலிகளை பற்றிய கவனம் கொண்டுவந்தது இந்த படம்.

Trending News