புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஷாலை சுற்றி தோண்டப்பட்ட பாதாளக்குழி.. ஜே கே ரித்தீஷ் போன பின் ஒவ்வொருத்தரா காலி பண்ணிய 2 பேர்

மன உளைச்சல், நிம்மதியின்மை, சண்டை சச்சரவு என மொத்தமாய் சூழ்ந்து கொண்டதால் விஷால் வேறு விதமான ஒரு நிம்மதியை தேடி போய்விட்டார். அந்த நிம்மதி இன்று அவரின் உடலுக்கு தீராத பிரச்சனையை கொடுத்துள்ளது.

செல்லமே படத்தில் மூலம் தனது கேரியரை தொடங்கினார் விஷால். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினி, விஜயகாந்த் போன்றவர்கள் விஷாலின் சண்டை காட்சிகளை பார்த்து, இவர் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என ஆரம்பத்திலேயே பாராட்டினார்கள்.

அப்படிப்பட்ட விஷால் இன்று பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறார். இரண்டு நிமிடம் கூட பேச முடியாமல் கை, கால்கள் நடுக்கத்துடன் காணப்படுகிறார். இதற்கு காரணமானவர்களை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தோலுரித்துள்ளார். முதன்முதலாக விஷாலுக்கு பிரச்சனையை கொடுத்தவர் இயக்குனர் பாலா.

அவன் இவன் படத்தில் மாறு கண் கதாபாத்திரத்திற்காக கண்களை ஒரு பக்கமாக தைத்துள்ளனர், விஷாலுக்கு அன்றிலிருந்து ஒற்றைத் தலைவலி ஆரம்பித்துவிட்டது. அதன் பின் நண்பர்களுக்காக லத்தி படம் பண்ணினார். அதுவும் நாசமா போனது . பின்னர் லைக்காவுடன் பிரச்சனை என ஒட்டுமொத்த depressionக்கு ஆளானார்.

விஷாலை சுற்றியுள்ள நல்ல நண்பர்களை இரண்டு பேர் சேர்ந்து கொண்டு கழட்டி விட்டனர். ஜே கே ரித்தீஷ் விஷாலை நடிகர் சங்க பொறுப்புக்கு கொண்டு வந்தார். மொத்த நாடக நடிகர்களையும், ஜே கே ரித்தீஷ் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு விஷாலுக்கு ஆதரவாக நின்றார்.

ரித்திஷ் மூலம் இரண்டு பெரிய பொறுப்புகளை வகித்து வந்தார் விஷால். எதிர்பாராத விதமாக ரித்தீஷ் நெஞ்சு வலி காரணமாக மறைந்தார். தற்போது விஷால் அருகே இருக்கும் நண்பர்கள் அவரை சுற்றி பாதாளகுழியவே தோண்டிவிட்டனர். விஷால் இதிலிருந்து வெளிவந்தால் அவர் கேரியரை காப்பாற்றிக் கொள்ளலாம்.

Trending News