வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கா திரியும் விஷால்.. சந்தைக்கு போனும் காசு குடுன்னு வளர்ந்த தம்பி செய்யும் இம்சை

விஷால் வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் ரத்னம் அதுவும் சரியாக போகவில்லை. இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லை. சுதா கொங்காரா இயக்கப் போகும் புறநானூறு படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது, அதற்கும் 18 கோடிகள் கேட்டு வந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

இப்பொழுது ஏவிஎம் நிறுவனம் அவரைத் தேடிச் சென்றிருக்கிறது. படம் பண்ணுவதற்காக கால்ஷீட் கேட்டதற்கும் 20 கோடிகள் சம்பளம் வேண்டும் என விடாப்பிடியாய் நிற்கிறாராம். ஒரு வழியா நடந்த பேச்சு வார்த்தையில் ஏவிஎம் நிறுவனமும் 20 கோடிகள் கொடுக்க சம்மதித்துள்ளனர்.

அட்வான்ஸ் ஆக 5 கோடியும், ஷூட்டிங் நேரத்தில் ஐந்து கோடியும், படம் முடிந்த பிறகு 5 கோடிகளும், அதன் பின் டப்பிங் பேசுகையில் ஐந்து கோடிகளும் என மொத்தம் 20 கோடிகள் பிரித்து தருவதாக கூறியிருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனம். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத விஷால் உடனடியாக 10 கோடிகள் கேட்டுள்ளார்.

தனக்கு பத்து கோடிகளுக்கு அவசர செலவு இருப்பதாகவும். அந்த கமிட்மெண்டை முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தி இருக்கிறார். தன்னைத் தேடி வரும் அனைவரிடமும் இப்படித்தான் கராராக பேசி வருகிறாராம். ஏற்கனவே புறநானூறு வில்லன் வாய்ப்பு பறிபோனது இப்பொழுது இந்த வாய்ப்பும் கேள்விக்குறியானது.

விஷாலுக்கு அப்படி என்ன அவசரமான செலவு, பத்து கோடிகள் கேட்டு அவசரப்படுத்துகிறாரே என்று விசாரித்தால், அவர்களுக்கு அதன் பின் தான் காரணம் தெரிந்திருக்கிறது. ஏற்கனவே அவர் மிஸ்கினுடன் சண்டை போட்டதற்குப்பின் துப்பறிவாளன் படம் இரண்டாவது பாகம் நிலுவையில் உள்ளது. அந்தப் படத்தை விஷாலே இயக்குகிறார். நிதி நெருக்கடியில் இருக்கும் அந்த படத்திற்கு தான் இவ்வளவு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

Trending News