வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

Vishal informed that he is going to make a film with Vijay: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள விஷால் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்தார் ஆரம்பித்தார்,  செல்லமே, சண்டக்கோழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்ட விஷால், தலைநகரம் வடிவேலு போல் வான்டட் ஆக வம்பு சண்டையே இழுத்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்.

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தடாலென சில அறிவிக்கைகளை அறிவித்துள்ளார் விஷால்.

இதுவரை எந்த படமும் கமிட்டாகாத நிலையில் 2017 ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான துப்பறிவாளன் படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் தயாரிப்பாளரான விஷால். இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கினுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலே நின்றது.

Also read: விஷால் வாழ்க்கையில் விளையாடிய 3 நடிகைகள்.. ஆறு அடி தம்பிக்கு ஆப்படித்த ஹீரோயின்ஸ்

இதனை அடுத்து மிஷ்கின் எடுத்த காட்சிகளை வேண்டாம் என்று நிராகரித்து தானே இயக்கப் போவதாக அறிவித்தார் விஷால். மிஷ்கின்,”விஷால் என் தம்பி மாதிரி” என சமாதான புறாவை தூது விட்ட போதும் கண்டுகொள்ளாது போனார் விஷால்.  துப்பறிவாளன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக விறுவிறுப்புடன் இயக்கி சூப்பர் ஹிட் ஆக்குவது என்ற வெறியோடு ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளார் விஷால்.

அவர் போக்கிலேயே துப்பறிவாளன் 2 சக்சஸ் ஆகிவிட்டால் விஷாலின் அடுத்த இலக்கு விஜய்யாக தான் இருக்குமாம். துப்பறிவாளனின் வெற்றியை வைத்து விஜய்யை இம்பிரஸ் பண்ணி, விஜய்யின் அடுத்த படத்தை  இயக்குவதற்கு வாய்ப்பு கேட்கப் போவதாக கூறியுள்ளார் விஷால்.விஜய்யை வைத்து தான் எடுக்கும் படம் ஹிட்டானால் மட்டுமே அரசியலில் குதிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் விஷால்.

இப்படித்தான் நடிகர் சங்க கட்டடத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் என்று முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் இது வேறயா..!

தொடக்கம் நல்லாதான் இருக்கு! முடிவுதான் எப்படி இருக்க போகுதோ தெரியலையே? விஷாலின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள் சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இதற்கு நெட்டிசன்களோ இது ரெண்டுமே நடக்காது என்று ஆருடம் கூறி விஷாலை கலாய்த்து வருகின்றனர்.

Also read: ஓடி ஒளியுற ஆள் இல்ல, தேடி அடிக்கிற ஆளு.. விஷால் அறிக்கை விட்ட நாளில் நடந்த தரமான சம்பவம்

Trending News