வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமல், ஷங்கர் கூட்டணியை அவமானப்படுத்தும் விஷால்.. லைக்கா மீது தொடர்ந்த வழக்கு

Vishal Against Lyca: விஷாலுக்கும் சர்ச்சைக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனையை இழுக்கவில்லை என்றால் அவருக்கு அன்றைய பொழுதே ஓடாது. அப்படித்தான் தற்போது அவர் இந்தியன் 2 படத்தை பற்றி நெகட்டிவ் விஷயத்தை கூறி பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

அதாவது விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இருக்கும் பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை. கோர்ட், கேஸ் என்று அது ஒரு பக்கம் இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில் விஷால் லைக்கா மீது புது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் லைக்கா நிறுவனத்தின் 5 கோடி மதிப்பிற்கான சொத்துக்களை முடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவர் கூறிய காரணம்தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதாவது 500 கோடி பட்ஜெட்டில் லைக்கா தயாரித்து வரும் இந்தியன் 2 படம் ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும்.

Also read: 2023-ல் ஜாக்பாட் வெற்றிக் கொடுத்த 5 ஹீரோக்கள்.. ஹாட்ரிக் அடிச்ச அனகோண்டா விஷால்

அதனால் எனக்கு வரவேண்டிய பணம் கிடைக்காது. லைக்கா ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அவர்கள் தப்பித்து ஓடவும் வாய்ப்பு இருக்கிறது என படு கேவலமான காரணத்தை கூறியிருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியன் 2 படத்துக்காக கமல், சங்கர் இருவரும் வருட கணக்கில் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது விஷால் அவர்களை அவமானப்படுத்துவது போல் பேசி இருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. ஒரு வேலை இப்படி ஒரு பிரம்மாண்ட கூட்டணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பொறாமையால் அவர் பேசியிருக்கிறாரா என்றும் பேசப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக விஷால் எது பேசினாலும் செய்தாலும் அது பிரச்சனையில் தான் முடிகிறது. அப்படி இருக்கும்போது வெளிவராத ஒரு படத்தை பற்றி அவர் நெகட்டிவ் கமெண்ட் அடித்திருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவர் கமலையும் அவமானப்படுத்தி இருக்கிறார்.

Also read: கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

Trending News