திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இயக்குனரா புடிச்சாலும், தயாரிப்பாளரா மன்னிக்கவே மாட்டேன்.. அந்நியன் போல் ஆக்ரோசமாக மாறிய விஷால்!

Actor Vishal: சமீப காலமாகவே விஷாலின் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் அவர் முழுமையாக படங்களில் கவனம் செலுத்தாது தான். இதனால் இப்போது சங்க பொறுப்புகளை எல்லாம் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு படங்களில் நடிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குனரின் பெயரை கேட்டதும் அந்நியன் போல் ஆக்ரோசமாக மாறிவிட்டார். துப்பறிவாளன் முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Also Read: 27 வயது நடிகையை திருமணம் செய்யும் விஷால்.. முரட்டு சிங்கிளுக்கு கிடைத்த ஜோடி

இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசினர். படத்திலிருந்து மிஷ்கின் விலகினார் பின்பு அந்தப் படத்தை விஷால் இயக்கி தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் விஷால் நன்றாக பேசும்பொழுது மிஷ்கின் பெயரை சொன்னதுமே செம கடுப்பில் பேசுகிறார்.

விஷாலின் கோபம் கொஞ்சம் கூட மாறவில்லை. அவர் ஒரு துரோகம் செய்தவர், அவரை வாழ்க்கையில் மன்னிக்கவே மாட்டேன் என அடித்து கூறுகிறார். அவர் நல்ல இயக்குனராக இருந்தாலும் சரி ஆனால் நான் ஒரு தயாரிப்பாளராக இருந்து அவரை மன்னிக்க மாட்டேன். இனிமேல் என் வாழ்க்கையில் சேர்க்கவே மாட்டேன், அப்படி ஒரு துரோகி அவர் என்ன பேசியுள்ளார்.

Also Read: அந்த ஈகோ புடிச்சவனுக்கு மயி** கூட படம் பண்ண மாட்டேன்.. மீண்டும் பொதுவெளியில் அசிங்கமாக பேசிய மிஸ்கின்.!

மிஷ்கினும் இப்படித்தான் ஃபர்ஸ்ட் பேசினார். ஆனால் போக போக மேடைகளில்அவரது கோபம் தணிய துவங்கியது. தற்பொழுது பல பேட்டிகளில், விஷால் ஒரு ஸ்வீட் பாய், நல்ல பையன் என சமாதானம் பேசுற மாதிரி பேசுகிறார். தப்போ சரியோ விஷால் பேசுவதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்து வருகிறார். ஆனால் மிஷ்கின் மாறி மாறி பேசி வருகிறார்.

மிஷ்கின் தற்பொழுது விஷாலை பற்றி நல்லவிதமாக பேசுவதை பார்த்தால், இது நடிப்பாக தான் தோன்றுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கின் விஷாலை நல்லா வச்சு செஞ்சி இருக்கிறார். அதனால் தான் அவர் கோபம் இன்னும் குறையாமல் இருக்கிறது என்பது தெரிகிறது.

Also Read: மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

Trending News