வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

தனி ஒருவனாக நின்று போராடும் விஷால்.. ப்ளூ பிரிண்ட் மட்டும் வைத்து ரிஸ்க் எடுக்கும் புரட்சித் தளபதி!

Vishal is fighting alone for thupparivalan 2 Movie: தமிழ் சினிமாவில் இயக்குனராகும் கனவோடு நுழைந்து விதி வசத்தால் நடிகராக மாறி தற்போது மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பவர் தான் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால், ஹரியுடன் இணைந்து ரத்னம் என்ற படத்தில் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

கோடை விடுமுறையை ஒட்டி வரும் ஏப்ரல் 26 அன்று விஷாலின் ரத்னம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

தனி ஒருவனாக பிரமோஷனை தட்டி தூக்கி உள்ளார் விஷால். எப்படியும் இந்த படம் கமர்சியல் ஹிட் ஆகிடும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

இந்த படத்தை ரிலீஸ் செய்த உடன் லண்டன் கிளம்ப உள்ளார் விஷால். மிஷ்கின் இயக்கத்தில் 2017-இல் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் அடுத்த பாகம் துப்பறிவாளன் 2 படத்தை லண்டனில் ஆரம்பித்தபோது படப்பிடிப்பில் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட மோதலால் படம் பாதிலேயே கைவிடப்பட்டது.

மே மாதத்தில் துவங்கப்படும் துப்பறிவாளன் 2 

அதன் பின்பு  இயக்குனர் மிஷ்கின், விஷாலிடம் சமாதான புறாவை தூது அனுப்பிய போதும், தனது கொள்கையில் இருந்து மாறாது,

இனி மிஷ்கினுடன் இணைய போவதில்லை என்றும், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்தார் விஷால் .

அஜர்பைஜான் மற்றும் மால்டா போன்ற பகுதிகளில், லொகேஷன் பார்த்து விட்டு வந்த விஷால் இறுதியாக லண்டனை ஃபிக்ஸ் பண்ணி உள்ளார்.

மேலும்  இத்திரைப்படத்திற்கு என சில கதாபாத்திரங்களை ஆடிஷன் வைத்து, தேர்வு செய்து வருகிறார் இந்த புதிய இயக்குனர். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது பற்றி பேசிய விஷால் துப்பறிவாளன் கதைக்காக இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி கூறியதோடு, மிஷ்கின் எழுதிய கதையை மட்டும் வைத்துக் கொண்டு இயக்கத்தை தன் பொறுப்பில் எடுத்து மாபெரும் புரட்சி செய்யப் போகிறார் இந்த புரட்சி தளபதி.

மே மாதம் துப்பறிவாளன் படத்திற்கான படப்பிடிப்பை துவங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

போற வேகத்தை பார்த்தால் இந்த புதிய இயக்குனர் மணிரத்தினத்திற்கே டப் கொடுப்பார் போல தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News