புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லத்தி படம் மொக்கையானது கூட தெரியாத விஷால்.. துண்ட காணும் துணிய காணோம் என ஓடும் இயக்குனர்கள்

Actor Vishal: விஷால் சமீபகாலமாக தொடர் தோல்வி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். என்னென்னமோ குட்டி கர்ணம் போட்டு பார்த்தாலும் அவருடைய படங்கள் ஓடிய பாடு இல்லை. இந்த சூழலில் கடைசியாக அவர் பெரிதும் நம்பி இருந்த படம் தான் லத்தி. இந்த படத்தில் விஷால் மற்றும் சுனைனா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

விஷாலின் நண்பர்கள் தயாரித்த இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால் லத்தி படமும் படுமோசமான தோல்வியை அடைந்தது. ஆனால் தற்போதும் பழைய ஃபார்முலாவை விடாமல் அதையே பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார் விஷால். அதுமட்டுமின்றி அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது.

Also Read : படக்குழுவுக்கு தங்க காசு கொடுத்த விஷால் பட நடிகை.. அவரோட மார்க்கெட் தான் அதல பாதாளத்தில் கிடக்கு

விஷால் படப்பிடிப்புக்கு சரியாக வராத காரணத்தினால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விஷாலின் படத்தை தயாரிக்கவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வருவதில்லை. தப்பிதவறி ஒரு சிலர் வந்தால் அவர்களிடமும் விஷால் கண்டிஷன் போடுகிறாராம்.

அதாவது லத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 100 பேரை விஷால் அடித்து வெளுத்து வாங்குவார். அதேபோல் என்னுடைய படத்தில் சண்டைக் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். லத்தி படத்தில் இந்த காட்சி தான் கேலி, கிண்டலுக்கு உள்ளானது.

Also Read : தொடர் பிளாப், ஆயுர்வேத சிகிச்சை என படாத பாடுபடும் விஷால்.. அந்த ஒரு பட்டத்தை கொடுத்து பத்த வச்ச நடிகை

ஒருவரால் எப்படி 100 பேரை அடிக்க முடியும் என ரசிகர்கள் நார் அடித்து இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் இப்போது வரும் இயக்குனர்களிடமும் இருபது நிமிஷம் பைட் சீன் வேண்டும் என அடம்பிடித்து கொண்டு இருக்கிறார். விஷாலின் பேச்சை கேட்டால் மொத்த கதையையும் மாற்ற வேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி இதனால் படம் ஓடுமா என்ற சந்தேகமே இயக்குனர்களுக்கு வந்துள்ளது. ஆகையால் விஷாலே வேண்டாம் என்று துண்டை காணும் துணிய காணும் என்று ஓடுகிறார்களாம். வர வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விஷால் இவ்வாறு அடம்பிடிப்பது அவரது சினிமா வாழ்க்கையை மேலும் பள்ளத்தில் தள்ளுகிறது.

Also Read : தாராளமாக கவர்ச்சி காட்ட ஒரு கோடி சம்பளம்.. விஷால் பட மில்க் பியூட்டி செய்த மட்டமான வேலை

Trending News