செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லோகேஷை பார்த்து பொறாமையில் பொங்கிய விஷால்.. லத்தி பட விளம்பரத்தில் போட்ட பெரிய ஸ்கெட்ச்

விஷால் நடிப்பில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வரும் படம் லத்தி இப்போது ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது லோகேஷும் அதில் கலந்து கொண்டார். அப்போது விஷால் தளபதி ரசிகர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க பார்த்திருக்கிறார்.

லத்தி படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்த தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சுனைனா நடித்துள்ளார். ஏற்கனவே விஷால் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது விஷால் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

Also Read: விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா

அதுமட்டுமின்றி லோகேஷை பார்த்தால் தனக்கு பொறாமை ஏற்படுவதாகவும், அவரைப் போல நிச்சயம் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறாராம். விரைவில் அதற்கான கதையை தயார் செய்துவிட்டு விஜய் இடம் சென்று ஓகே வாங்க போகிறாராம்.

இப்படி விஜயுடன் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டிக் கழித்த விஷால், இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்தி விஜய்யின் படத்தை இயக்கப் போவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  அதுவும் லத்தி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இதை தெரிவித்து தளபதி ரசிகர்களை, தன்னுடைய நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் லத்தி படத்தை பார்க்க வைப்பதற்காகவே இப்படி பேசி இருக்கிறார்.

Also Read: என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை

அதுமட்டுமல்ல விஷால் எப்போதுமே படபடவென பொரிந்து தள்ளுவது போல் பேசாமல், இந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் போலவே நிறுத்தி நிறுத்தி பொறுமையாய் அவர் போலவே பேசி  இருக்கிறார். இதை உன்னிப்பாக கவனித்திருக்கின்றனர்.

‘கடைசி வரைக்கும் நீ லோகேஷை பார்த்து பொறாமை பட்டுக்கிட்டே தான் இருக்க வேண்டும். முதலில் உன்னுடைய துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி முடி, பிறகு தளபதியை இயக்குவதைப் பற்றி யோசிக்கலாம்’ என்று சோசியல் மீடியாவில் காட்டமாக பதிவிடுகின்றனர்.

Also Read: கையில் லத்தியுடன் வெளுத்து வாங்கும் விஷால்.. ரிலீஸ் தேதியுடன் அதிரடி காட்டும் ட்ரைலர்

Trending News