திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க

சமீபகாலமாகவே விஷால் பப்ளிசிட்டிக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். அதிலும் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்று இவர் செய்து வரும் அனைத்து விஷயங்களும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் இப்போது மற்றொரு விஷயமும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதாவது இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்திருந்தார். அது குறித்த போட்டோக்கள் கூட வெளியாகி வைரலானது. மேலும் மார்க் ஆண்டனியின் டீசரை விஜய் வெளியிடுவது குறித்து தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் உண்மையில் இதில் பல உள்குத்து சம்பவங்கள் இருக்கிறது.

Also read: ஜவானை விட லியோவுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு.. பொன்னியின் செல்வனில் என்ட்ரி கொடுத்த விஜய்

அதாவது தளபதியை நேரில் சந்திக்கச் சென்ற விஷால் பூங்கொத்து, மாலை போன்ற எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதற்கு மாறாக முதியோர் இல்லத்திற்கு செய்த உதவிக்கான ரசீதை தான் எடுத்துச் சென்றிருக்கிறார். அதை விஜய்யிடம் காட்டி உங்கள் சார்பாக நாங்கள் முதியோர் இல்லத்திற்கு சாப்பாடு போட்டோம். அவர்கள் உங்களை வாழ்த்தினார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் தற்போது பல கேள்விகளை முன் வைக்கிறது. அதாவது இந்த விஷயத்தை விஜய்யிடம் வாயால் சொல்லி இருந்தாலே அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். அதை விட்டுவிட்டு எதற்காக ஆதாரம் என்ற பெயரில் ரசீதை காண்பிக்க வேண்டும். செய்த உதவியை கூடவா விளம்பரப்படுத்துவார்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் விஷால் தற்போது முதியோர் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

Also read: இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

அதில் முதியோர்கள் அனைவரும் விஷாலுக்கும், விஜய்க்கும் நன்றி தெரிவித்து பேசி இருக்கின்றனர். இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதாவது விஷால், விஜய்யை வைத்து கேவலமாக விளம்பரம் தேடி வருவதாகவும், இப்படி ஒரு பப்ளிசிட்டி அவருக்கு தேவையா என்றும் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விஷாலுக்கு அரசியல் ஆசை இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டால் எப்படியாவது ஒரு பதவியை பிடித்து விடலாம் என்ற திட்டத்துடன் தான் அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்வதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதனால் தளபதி கொஞ்சம் உஷாரா இருங்க என்று விஜய்யின் ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Also read: துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

Trending News