திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணத்திற்கு முன்பே ஆடிய ஆட்டம்.. கேரளாவே கதி என்று கிடக்கும் விஷால்

சமீபகாலமாக விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது ஷூட்டிங்க்கு சரியான நேரத்தில் விஷால் கலந்து கொள்வதில்லையாம். அதுமட்டுமின்றி சில நாள் படப்பிடிப்புக்கு வருவதில்லையாம். அவர் நடித்த படங்கள் எல்லாம் சமீபகாலமாக படுமோசமான தோல்வி அடைந்து வருகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் விஷால் படத்தை எடுக்க பயப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் இந்தக் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு தான் தாலி கட்டுவேன் என வீர வசனம் எல்லாம் பேசி இருந்தார். ஆனால் அவருக்கு இப்போது 45 வயது ஆகிறது.

Also Read : மூக்கு முட்ட குடிச்சிட்டு காரில் மோதிய விஷால் பட நடிகை.. போதை தெளிந்த பின் பட்ட அசிங்கம்

கல்யாணமும் ஆன பாடில்லை, கட்டிடமும் கட்டிய பாடு இல்லை. இதற்கெல்லாம் மேலாக தற்போது விஷால் உடலில் நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறதாம். அதாவது படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ளும்போது விஷாலுக்கு காலில் அடிபட்டது. இதனால் சிகிச்சை பெற்ற விஷால் ரொம்ப நேரம் நிற்க முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

முதுகுத்தண்டு வலியும் விஷாலுக்கு இருக்கிறது. மேலும் அடிக்கடி தலைவலி வந்து செல்வதால் எதிலும் நிலையான கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷால் பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருந்தார்.

Also Read : காணாமல் போன விஷால் பட நடிகை.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் ஏற்பட்ட பரபரப்பு

இப்போது கண்ணை ஒரே மாதிரி வைத்துக்கொண்டு நடித்ததால் கண்பார்வை குறைபாடும் விஷாலுக்கு வந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு முன்பே திகட்ட திகட்ட எல்லா வேலையும் செய்து விட்டதால் இந்த வயதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இப்போது புத்துணர்ச்சிக்காக கேரளா சென்றதாக ரீல் விடுகிறார்.

ஆனால் அவருக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய தான் கேரளா சென்றிருக்கிறாராம். எல்லாவற்றையும் குணப்படுத்த வேண்டும் என்றால் வருட கணக்கில் சிகிச்சை எடுக்க வேண்டுமாம். இதனால் விஷால் கேரளாவே கதி என்று கிடப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read : ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்

Trending News