தமிழில் பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படம் உருவாக இருந்தது. இப்படத்தில் விஷால், கார்த்தி இருவரும் ஹீரோக்களாகவும், சாயிஷா ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். திட்டமிட்டபடி இரண்டு நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால், திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது.
இந்நிலையில் இதற்கு விஷால் தான் காரணம் என செய்திகள் வெளியானது. இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைவாக இருப்பதாக நினைத்து ஷூட்டிங்கிற்கு வரமறுத்து விட்டார் என சொல்லப்பட்டது.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள படத்தை தயாரிக்க இருந்த ஐசரி கணேஷ், “படத்தின் கதை எல்லாம் கேட்ட பிறகுதான் விஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். கார்த்தி சொன்னபடி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால், விஷால் வரவே இல்லை. ஏன் என்று கேட்டாலும் பதில் இல்லை. இதனால் நான் முதலீடு செய்திருந்த 4 கோடி எனக்கு நஷ்டம்தான்” எனக் கூறியுள்ளார்.

தப்ப தட்டி கேட்கும் நம்ம விஷாலே தப்பு பண்ணா எப்படி என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.