செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஜெயம் ரவியின் வெற்றிப்பட இயக்குனருடன் கைக்கோர்த்த விஷால்… 8 வருடம் கழித்து ஜோடி போடும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகர் விஷால் சமீபகாலமாக அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவியதால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள விஷால் அதிரடியாக அனைத்து படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

விஷால் நடிப்பில் தற்போது எனிமி என்னும் படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் இரண்டாவது முறையாக ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் விஷாலின் 30வது படமாகும். இதனை அடுத்து அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் அவரது 31வது படத்தில் நடித்து வருகிறார். வீரமே வாகை சூடும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் விஷாலின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து சற்றும் இடைவெளி இன்றி விஷால் அவரது 32வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுவும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகை சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதன் மூலம் நடிகை சுனைனா 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vishal
vishal

இதுவரை அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்த விஷால் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அடங்கமறு படத்தின் இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார். இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

Trending News