செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

உடல் எடையை குறைத்து, விஷாலுடன் 3வது முறையாக இணைந்த முன்னணி நடிகர்.. 64 வயதிலும் செம்ம ஸ்மார்ட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. அந்த வகையில் இரண்டாவது முறையாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படம் முடிவடைந்து வரும் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஷால் தனது 32வது படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார். விஷாலின் 32வது படத்தை அவரது நண்பர்களான ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்க, பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முன்னணி நடிகரான இளையதிலகம் பிரபு இணைந்துள்ளார். இந்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் பிரபு விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vishal-prabhu
vishal-prabhu

நடிகர் பிரபு தற்போது முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொழுக் மொழுக் என இருந்த பிரபு பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைத்து மீண்டும் சின்னத்தம்பி பிரபு போல தோற்றத்தை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News