வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கெத்து காண்பித்து கெட்டுப் போகும் விஷால்! 2 பேர பகைத்து மூணாவது நண்பனையும் எதிரியாக்கிய கொடூரம்

Vishal loses friends due to over attitude: தமிழ் திரை உலகில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் விஷால் அவர்கள் வாண்டட் ஆக சென்று பிரச்சனையில் மாட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் விஷால்.

கடந்த காலங்களில் நண்பர்கள் மூலம் பல நம்பிக்கை துரோகங்களை சந்தித்துள்ளார் விஷால். இதனால் தற்செயலான சில நிகழ்வுகளையும் தப்பான கண்ணோட்டம் கொண்டு புரிந்து உண்மையான நட்புகளையும் பிரியும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

நந்தா மற்றும் ரமணா இரு நடிகர்களும் விஷாலுக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் ஆவார்கள். நந்தா மற்றும் ரமணாவின் கூட்டணியில் ரமணா கிரியேஷன்ஸ் மூலம் உருவான லத்தி படத்தில் நடித்தார் விஷால்.

இதில் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக விஷாலுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே பிரிவு உருவானது. இவர்களைத் தவிர விஷாலுக்கு ஆர்யா, கார்த்தி, விஷ்ணு விஷால், உதயநிதி ஸ்டாலின் என நட்பு வட்டாரம் நீண்டு கொண்டே செல்கிறது.

விஷாலின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி விஷாலின் கேரியரில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது.

இதனை தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகி உள்ளது விஷாலின் ரத்னம். 

ஒரே தேதியில் ரிலீஸ் ஆகஇருக்கும் விஷாலின் ரத்னம் மற்றும் அரண்மனை 4

சமீபத்தில் வெளியான ரத்னம் ட்ரெய்லர் மாபெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இத்திரைப்படம் ஏப்ரல் 26 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில்  உருவான மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட தேதியில்தான் ரிலீஸ் பண்ணனும் என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் கூறியதாக தகவல்.

அவர்கள் யாரு டேட் பிக்ஸ் பண்ணுவதற்கு என விஷால் சண்டை போட்டார்.   தனது படத்தை ரிலீஸ் செய்ய சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பது போல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்டார்.

அதுமட்டுமின்றி சென்னை பெருவெள்ளத்தின் போதும் ஆளும் அரசுக்கு எதிராக சில அறிக்கைகள் வெளியிட்டார் விஷால்.

அப்போதெல்லாம் அமைதியாக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது விஷால் நடித்து வெளியாகும் ரத்னம் திரைப்படத்தின் ரிலீஸ் ஆகும் அன்றைய தேதியில் அரண்மனை 4 படத்தை களம் இறக்க உள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி  கண்ணா, கோவை சரளா,யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரில்லர் திரைப்படம் அரண்மனை 4, ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது

இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு அங்கலாய்த்து வருகிறார் விஷால். 

Trending News