சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஷாலின் சூப்பர் ஹிட் பட நடிகை விஜய் டிவி சீரியலுக்கு வந்த சோகம்.. 29 வயதிலேயே இப்படி ஆயிடுச்சே!

விஷால் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் அதன் பிறகு பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் தற்போது விஜய் டிவி சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திதான் கோலிவுட் வட்டாரங்களின் இன்றைய கிசுகிசு.

சினிமாவைப் பொருத்தவரை இந்த நடிகை கண்டிப்பாக பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பலரும் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அந்த லிஸ்டில் சேர்ந்தவர்தான் தாமிரபரணி பட நடிகை பானு.

விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் 2007ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் தாமிரபரணி. பக்கா கமர்சியல் குடும்ப திரைப்படமாக வெளியான இந்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானு.

அதனைத் தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம் போன்ற பிரபலமில்லாத படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை குறைத்துக் கொண்டார். ஐயா படத்தில் கொழுக்மொழுக் என நயன்தாரா மிகப்பெரிய வைரலானதால் அந்த அளவுக்கு இவரையும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தன்னுடைய படங்களின் கதை தேர்வில் சொதப்பி சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டிலானவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலம்மாள் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதனை பார்த்த பல ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். எப்படி எல்லாம் வரவேண்டிய பொண்ணு இப்படி ஆயிடுச்சே என சமூக வலைதளங்களில் சோக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

actress-banu-in vijaytv-velammal-serial
actress-banu-in vijaytv-velammal-serial

Trending News