வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மிஸ்கின் எனக்கு தேவையில்லை.. 2 புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஷால்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவிற்கு வசூலை குவித்தது.

துப்பறிவாளன் 1 பாகம் நல்ல வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் விஷால் மற்றும் மிஷ்கின் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே துப்பறிவாளன் 2 பாகம் உறுதியாகி படப்பிடிப்பு நடந்தது.

ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட பின்பு அப்படியே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் மிஸ்கின் எடுத்துள்ள காட்சிகளைத் தவிர மீதி காட்சிகளை விஷாலே இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மிஸ்கின் எடுத்தது போல் படம் இல்லை என படக்குழுவினர் படத்தினை நிறுத்தி வைத்துள்ளனர்.

vishal-priya-bhavani-sankar-cinemapettai
vishal-priya-bhavani-sankar-cinemapettai

அதன் பிறகு விஷால் யார் இயக்கத்தில் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது 2 இயக்குனர் வாய்ப்பு தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடங்கமறு படத்தை எடுத்த கார்த்திக் தங்கவேல் விஷாலை வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

அடுத்ததாக புதுமுக இயக்குனரான சரவணன் என்பவருடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த 2 இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Trending News