ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஷாலை வைத்து இயக்கிய பிரபுதேவா.. வாக்குவாதத்தால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று அடுத்து பல இயக்குனர்கள் விஷாலை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்போது விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி எனும் படத்தில் நடித்துள்ளனர் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஷால் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படி சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் பல துறைகளிலும் கால் பதித்துள்ளார் விஷால். ஆனால் விஷால் மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளனர் இப்படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளராக ஐசரி வேலன் என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முதலில் விஷால் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் நடந்துள்ளனர். ஆனால் விஷால் தனது கதாபாத்திரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என பிரபுதேவாவிடம் கூறியுள்ளார் அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் விஷாலுக்கும் இடையே ஒரு சில பிரச்சினைகள் வந்துள்ளது.

அதன்பிறகு இப்படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தகவலும் வெளியாகவில்லை ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளரான ராஜன் பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது இதனால் அந்த தயாரிப்பாளர் மிகப் பெரிய அளவில் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்துள்ள விஷாலே ஒரு தயாரிப்பாளருக்கு இப்படி செய்யலாமா என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் விஷால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது வரை அவரது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News