Vishal: இந்த வருடம் தல பொங்கலாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விடாமுயற்சி தள்ளிப் போனதால் அவர்களுடைய கனவு ஆசை எல்லாம் இப்போது கானல் நீர் ஆகிவிட்டது.
இதற்கு காரணமான லைக்காவை அஜித் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க விடாமுயற்சி ரேஸிலிருந்து விலகிய நிலையில் பல படங்கள் களத்தில் குதித்துள்ளது.
அதன்படி காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, படைத்தலைவன், டென் ஹவாஸ், சுமோ உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த வரிசையில் விஷாலும் இணைந்துள்ளார்.
அவருடைய படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது. இதை சந்தானம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013 பொங்கலுக்கு வெளிவர வேண்டிய படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.
விடாமுயற்சியால் விஷாலுக்கு கிடைத்த விமோச்சனம்
முழு நீள நகைச்சுவை படமான இதை அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அது நடக்காத நிலையில் கிட்டத்தட்ட இப்படத்தை அனைவரும் மறந்து போய்விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு மாமாங்கம் கழித்து மீண்டும் விஷால் சந்தானம் கூட்டணி ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. அதன்படி மதகஜராஜா 2025 ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் விடாமுயற்சியால் விஷால் படத்துக்கு விமோசனம் கிடைத்துவிட்டது என ரசிகர்கள் ஜாலி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.