நடிகர் விஷால் நடிப்பில் தற்போது பேன் இந்தியா திரைப்படமாக வரும் டிசம்பர் 22ஆம் தேதி லத்தி திரைப்படம் உலகமெங்கும் பல திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், சுனைனா, பிரபு முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே இத்திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விஷால் சில பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அண்மையில் வெளியான ஒரு பேட்டியில் நடிகர் விஷால் தன்னை குறித்து பேசும் வகையில் அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் மற்ற சினிமா துறையினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் ஏன் செல்லாமல் உள்ளீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த விஷாலின் பதில் தான் இங்கு பலருக்கும் ஆச்சரியத்தையும்,சிரிப்பலையையும் ஏற்படுத்தி உள்ளது.
Also read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை
பொதுவாக விஷால் என்றாலே சற்று திமிர் பிடித்தவர், யாரையும் மதிக்காதவர், எதிலும் சரியாக தனது வேலையை செய்யாதவர் என்ற பல எதிர்மறையான விமர்சனங்கள் அவர் மீது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது. இருந்தாலும் அதை எதையும் காதில் வாங்காமல் விஷால் தனது வேலையை எப்போதும் போல செய்து கொண்டு வருபவர்.
இதனிடையே நடிகர் விஷால் அந்த பேட்டியில், சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வதே எனக்கு பிடிக்காது. ஏன் இதற்கு மேலாக எனது திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு செல்வதே எனக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் சினிமா பிரபலங்களால் நடத்தப்படும் பார்ட்டி நிகழ்ச்சிகள் என்றாலே எனக்கு பயம் என்று விஷால் கூறினார்.
Also read: சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி
மேலும் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நான் ஏதாவது ஒரு மேடையில் ஏறுகிறேன் என்றால் தலைகுனிந்து தான் செல்வேன், அதுதான் என்னுடைய பழக்கம். ஆனால் இதைப் பார்த்து மேடையில் இருக்கும் சில பெரியவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் திமிராக அவன் பாட்டுக்கு போகிறான் என கூறுவார்கள். இந்த சர்ச்சைகாகவே நான் மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்து விட்டேன் என விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷாலின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பார்ட்டி என்றாலே எனக்கு பயம் என்று கூறியது தான் சற்று வேடிக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வது பிடிக்காது என்றால், ஏன் நடிகர் சங்க கட்டிடத்திற்கு பணம் திரட்ட ஊர் ஊராக சென்று நிகழ்ச்சிகளை நடத்தினார் என்றும் விஷால் மீது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
Also read: பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி