வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நட்புக்குள் ஏற்பட்ட பிளவு.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு டாட்டா போட்ட விஷால்

Vishal : விஷாலுக்கு பட வாய்ப்புகள் இப்போது சினிமாவில் மிகவும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க விஷால் தான். அதாவது படப்பிடிப்புக்கு வராமல் ஓவர் பந்தா காட்டிக் கொண்டு இருந்தார். இதனால் தயாரிப்பாளர் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வந்தார்.

இதுகுறித்து விஷால் இடம் கேட்கும் போது உதயநிதி என்னுடைய நண்பன் என்று கூறி பந்தா காண்பித்து வந்தார். இதனால் தயாரிப்பாளர்களும் விஷாலை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். இதனாலேயே உதயநிதி மற்றும் விஷால் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விஷாலின் லத்தி படம் வெளியான போதே இவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அதனால் தான் பெரிய படங்களை தமிழ்நாட்டில் வினியோகம் செய்து வரும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தை வாங்கவில்லை.

Also Read : கமல், ஷங்கர் கூட்டணியை அவமானப்படுத்தும் விஷால்.. லைக்கா மீது தொடர்ந்த வழக்கு

இவ்வாறு மாமா, மச்சான் என்று பழகிக் கொண்டிருந்த விஷால் மற்றும் உதயநிதி நட்பு இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது. இதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் விஷால் பங்கு பெறவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்த் இறப்புக்கு தன்னால் வர முடியவில்லை என்று கண்ணீர் மல்க ஒரு வீடியோவை விஷால் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த சூழலில் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வராத பல பிரபலங்கள் இப்போது இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். ஆனால் விஷால் இன்னும் வரவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Also Read : கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

Trending News