சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அனகோண்டா நடிகருக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்.. எச்சரிக்கும் நண்பர்கள் கூட்டம்

செய்தி வாசிப்பாளராக மீடியா கேரியரை தொடங்கி பின்னாளில் சீரியல் நாயகியாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியா பவானி சங்கர்.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக அளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் கைவசம் குறைந்தது 15 படங்களாவது இருக்கும்.

அந்த அளவுக்கு இரண்டாம் கட்ட நடிகர்கள் மத்தியில் விருப்பப்பட்ட நடிகையாக உள்ளார். ஆளாளுக்கு பிரியா பவானி சங்கரை தன்னுடைய படங்களில் ஜோடியாக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு கட்டளை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக பிரியா பவானி சங்கர் தன்னுடைய கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓரளவு மார்க்கெட் உள்ள நடிகராக பார்த்து தேர்வு செய்கிறார்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் அனகோண்டா நடிகர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். விஷாலுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுக்கு கிசுகிசு பிரச்சனைகள் ஏராளம் வரும். அந்த வகையில் நீயும் மாட்டி விடாதே என பிரியா பவானி சங்கரை அவரது நண்பர்கள் எச்சரிக்கிறார்களாம்.

ஜெயம் ரவிக்கு அடங்கமறு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடுத்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளது தான் இன்றைய சினிமா ஹாட் டாபிக்.

vishal-priya-bhavani-sankar-cinemapettai
vishal-priya-bhavani-sankar-cinemapettai

Trending News