நடிகர் விஷாலுக்கும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரிக்கும் இடையில் பஞ்சாயத்து வளர்ந்துள்ள நிலையில் அது போலீஸ் கேஸ் ஆகி தற்போது பெயரை கெடுக்கும் அளவுக்கு ஆகியுள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் இரும்பு திரை படத்தின் போது ஆர்பி சவுத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகிய இருவரிடமும் கடன் வாங்கியிருந்தாராம். எப்போதுமே கடன் வாங்கும்போது பத்திரம் போட்டுக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பாத்திரங்களை பாதுகாத்தவர் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டதால் அந்த பாத்திரத்தை உடனடியாக கண்டுபிடித்து தர முடியவில்லையாம்.
இதன் காரணமாக பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார் என்று மட்டும் எழுதி வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார் ஆர்பி சவுத்ரி. ஆனால் விஷால் அதை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டி பணம் பிடுங்கி விடுவார்களோ என பயந்து போய் கிடக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார்.
தற்போது தான் சென்னையில் இல்லை எனவும், சென்னை வந்தபிறகு அதை பற்றி பேசிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார் ஆர்பி சவுத்ரி. சமீபகாலமாக விஷாலின் படங்கள் பேசுகிறதோ இல்லையோ, அவரை பற்றிய சர்ச்சைகள் அளவுக்கு அதிகமாக பேசப்படுகிறது.
மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி கொண்டே இருக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். இதற்கு ஒரு முடிவே இல்லையா பாஸ்?
