அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வரும் விஷால்(vishal) கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். எந்த அளவுக்கு தோல்வி படங்கள் என்றால் அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சி கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசமான படங்களாக அமைந்து வருகிறது.
செல்லமே, சண்டக்கோழி, திமிரு என அதிரடி காட்டி வந்தவர் விஷால். விஷால் படங்களில் பிரதானமாக கமர்சியல் அம்சங்கள் நிறைய உள்ளதால் குடும்ப ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடும்.
கடைசியாக அவர் நடித்த சில படங்களில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு திரை போன்ற படங்களை தவிர வேறு எந்தப்படமும் வெற்றியை பெறவில்லை. கடைசியாக வெளியான சக்ரா திரைப்படமும் தோல்வியை தழுவியது.
ஆனால் இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது என்னவோ சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படம் தான். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியிலேயே தோல்வியை சந்தித்தது.
அதற்கு முன்னர் இதே கூட்டணியில் வெளியான ஆம்பள திரைப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றியைப் பெற்றதால் அதைவிட பெரிதாக செய்யவேண்டுமென விஷாலை வச்சு செய்துவிட்டார் சுந்தர் சி.
ஆக்சன் படத்தின் தோல்வி தான் தன்னுடைய மார்க்கெட் நாசமா போனதுக்கு காரணம் என பார்க்கும் இடத்திலெல்லாம் புலம்பி வருகிறாராம் விஷால். அதன்பிறகு அவர் நடித்து வந்த துப்பறிவாளன் 2 படமும் பாதியில் நிறுத்தப்பட்டு மேலும் விஷாலுக்கு பல சிக்கலை கொடுத்துள்ளது.