செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

4 கோடிக்கு படமா, சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை.. ஆணவ பேச்சை நிறுத்திட்டு இத செஞ்சிருக்கலாம்

Actor Vishaal: நடிகர் விஷாலுக்கு மாதம் ஒரு முறை ஊர் வாயில் விழாமல் இருக்க முடியாது. ஏதாவது ஒன்னு சர்ச்சையாக பேசி, செய்து வம்பை விலை கொடுத்து வாங்குவார். சமீபத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி படம் வசூலில் 100 கோடியை தொட இருக்கிறது. அந்த ஆணவம் தான் என்னவோ சமீபத்தில் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்வின் போது தேவையில்லாத விஷயத்தை பேசி வசமாக சிக்கி இருக்கிறார்.

விஷால் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதேபோன்றுதான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். இவர் தன்னுடைய சொந்த காசு போட்டு எடுத்த நிறைய படங்கள் இவருக்கு மொத்தமாக நாமத்தை தான் போட்டு இருக்கின்றன. சொந்த அனுபவத்தை சொல்லுகிறேன் என்ற பெயரில் சினிமாவை கனவாக நினைத்து வரும் நிறைய பேரின் மனம் நொந்து போகும் அளவிற்கு பேசியிருக்கிறார்.

Also Read:4 கோடி காசு வச்சுட்டு வராதீங்க, தயாரிப்பாளரா கதறிய விஷால்.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல

அதாவது உங்கள் கையில் ஒரு நாலு கோடி இருந்துச்சுன்னா, அதை எடுத்துட்டு உடனே சினிமாவில் படம் பண்றேன்னு வந்துராதீங்க, வீடு கட்டுங்க, சொத்து வாங்குங்க, படம் எடுத்தால் சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இவருடைய இந்த கருத்து சின்ன பட்ஜெட் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் விதமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்போது பெரிய ஹீரோக்களை வைத்து கோடிக்கணக்கில் பட்ஜெட்டை போட்டு படம் எடுத்து ஒரே நாள் சோவில் போட்ட காசை மொத்தமாக எடுத்து விட வேண்டும் என்ற கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. இதனாலேயே முன்னணி ஹீரோக்கள் மீது கோடி கணக்கில் முதலீடு போட்டு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறது.

Also Read:வந்தால் பல கோடி இல்லனா தெருக்கோடி.. விஷாலை நம்பி மோசம் போனதால் சட்டையை பிடித்த தயாரிப்பாளர்

லோ பட்ஜெட் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டால், மூன்று நாள் கால அவகாசம் தான் கொடுக்கப்படுகிறது. அதற்குள் படம் பிக்கப் ஆகாவிட்டால் உடனே தூக்கப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். இந்த மாதிரியான படங்களை ரிலீஸ் செய்வதற்கு சினிமா துறையினர் சார்பில் ஒரு ஓடிடி தளத்தை உருவாக்கலாம்.

இதன் மூலம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வரலாம். இதனால் அந்த இயக்குனர்களுக்கும் அடையாளம் கிடைக்கும். அதை விட்டுவிட்டு கருத்து சொல்லுகிறேன் என்ற பெயரில் சின்ன பட்ஜெட் படங்களை குழி தோண்டி புதைக்க விஷால் பேசி வருவது அவருடைய பொறுப்பற்ற தன்மையை தான் காட்டுகிறது.

Also Read:வெறித்தனமாக வசூல் வேட்டையாடும் மார்க் ஆண்டனி.. 2 வார வசூல் இத்தனை கோடியா?

- Advertisement -spot_img

Trending News