சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிக்கி சின்னா பின்னமாகி வெளிவந்த மார்க் ஆண்டனி.. தேறுமா, தேறாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Mark Antony Twitter Review: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் இன்று மார்க் ஆண்டனி வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் இப்படம் சுமாரான எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும் ட்ரெய்லர் வெளியான பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டி இருந்தது.

mark-antony-twitter
mark-antony-twitter

ஆனால் கடைசி நேரத்தில் பட வெளியீட்டிற்கு வந்த பிரச்சனை ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஆட்டம் காண வைத்தது. அதனாலேயே படம் வெளியாகுமா என்ற சந்தேகத்துடன் ரசிகர்கள் இருந்த நிலையில் ஒரு வழியாக சிக்கி சன்னா பின்னமாகி மார்க் ஆண்டனி வெற்றிகரமாக வெளியானது.

Also read: மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

அதன்படி தற்போது படத்தை பார்த்த அனைவரும் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவை அனைத்துமே பாசிட்டிவாக தான் இருக்கிறது. அதிலும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு ஆடியன்ஸை ஆஹா ஓஹோ என்று புகழ வைத்திருக்கிறது.

review-mark-antony
review-mark-antony

மேலும் அவர் ஒட்டு மொத்த படத்தையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோன்று கடந்த சில தோல்விகளை கொடுத்து இப்படத்தை மலை போல் நம்பி இருந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

அந்த வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள சிலுக்கு டான்ஸ், டைம் டிராவல் கான்செப்ட், இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருக்கும் நகைச்சுவை தான்.

mark-antony-review
mark-antony-review

அதனாலேயே படத்தை நன்றாக என்ஜாய் செய்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி சில பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பின்னணி இசையில் கொஞ்சம் சொதப்பி இருக்கின்றனர். இருந்தாலும் எஸ் ஜே சூர்யா, விஷாலின் அலப்பறை பாஸ் மார்க் வாங்கிவிட்டது.

mark-antony
mark-antony

 

Trending News