வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆடு மீது அனகோண்டாவுக்கு என்ன விசுவாசம்னு தெரியுமா.? ரெட் ஜெயன்ட் உதயநிதியை எதிர்க்க காரணம் இந்த பிரபலமா.?

Actor Vishal: விஷால் தற்போது அரசியலுக்கு வர போவதை உறுதி செய்துவிட்டார். பல நாட்களாகவே இதற்கான வேலையை சத்தம் இன்றி பார்த்த இவர் தற்போது ஓப்பனாக அறிவித்துள்ளார்.

அதோடு குடும்ப அரசியல் பற்றி பேசி உதயநிதியையும் வம்புக்கு இழுத்துள்ளார். அது மட்டுமா ரஜினி, விஜய் என சகட்டுமேனிக்கு அனைவரையும் வச்சு செய்து விட்டார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அவர் ரெட் ஜெயன்டை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தது தான். ஏனென்றால் உதயநிதியும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.

உதயநிதியை எதிர்க்கும் விஷால்

அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தை நேரடியாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர் இப்படி பேசியிருப்பது நிச்சயம் ஏதோ ஒரு திட்டத்துடன் தான்.

ஏற்கனவே விஷால் பாஜக அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசி இருந்தார். அப்போதே அந்த கட்சியில் இவர் இணைய போகிறாரா என்று பேசப்பட்டது.

இந்நிலையில் உதயநிதியை எதிர்த்து அவர் பேசி இருப்பது அண்ணாமலை மீது இருக்கும் விசுவாசத்தினால் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் போகப் போக தெரிந்து விடும்.

Trending News