சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

என் படத்தை ரிலீஸ் பண்ண விடாம சதி பண்றாங்க.. வாய்ப்பு கொடுத்த ஹரிக்கும் சேத்து ஆப்பு வைக்கும் விஷால்

Rathnam movie issue: விஷால் பல நேரம் பண்றது எல்லாமே காமெடியா இருக்கும். அதனாலேயே அவர் சீரியஸா சொல்ற விஷயம் எதுவுமே யாருக்கும் மனசுல நிக்காது. சமீபத்தில் மழை வெள்ள சமயத்தில் அவர் பேசிய வீடியோ, விஜயகாந்த் மரணம் பற்றி அவர் பேசிய வீடியோ எல்லாமே இந்த கேட்டகிரியில் தான் காமெடியில் சேர்ந்தது.

அப்படித்தான் இப்போதே என் படத்தை யாருமே ஓட விட மாட்டேங்கிறாங்க என அவர் கதறுவது கூட, படத்தின் வெற்றிக்கான ஸ்டன்ட் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் தான் ரத்னம். இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஹரி ஒரு பக்கம், விஷால் ஒரு பக்கம் பிரமோஷன் வேலைகளை ஆரம்பிச்சுட்டாங்க. போனவாரம் வரைக்கும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இந்த வாரம் முழுக்க ரத்தினம் படத்தின் பிரச்சாரம் தான் பெரிய அளவில் இருக்கிறது.

அறிவு ஒரு பக்கம் மேலே போய் மக்களை நேரில் சந்தித்து ரத்தினம் படத்த பாருங்கன்னு கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டார். அது சரி ஹரிக்கு இது மொத்தத்துல வாழ்வா சாவா என்ற பிரச்சினை தான். இந்த படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும், அப்பொழுதுதான் மீண்டும் அவரால் ஃபார்முக்கு வர முடியும்.

இல்லை என்றால் வருஷத்துக்கு அருண் விஜய வச்சு ஒரு படம் தான் கொடுத்துட்டு இருப்பார். விஷாலுக்கும் அதே நிலைமைதான். கடைசியா சொல்லுகிற அளவுக்கு அவருக்கு எந்த பெரிய வெற்றி படங்களும் இல்லை. மார்க் ஆண்டனி வெற்றி என்றாலும் அதன் மொத்த பேரும் எஸ் ஜே சூர்யாவிற்கு தான்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாளை படத்தின் ரிலீஸ் வைத்துக் கொண்டு, என் படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேங்கிறாங்க என்று மீடியா முன்பு வந்து பேசி இருக்கிறார் விஷால். தஞ்சாவூர் பகுதியில் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஹரிக்கும் சேத்து ஆப்பு வைக்கும் விஷால்

நாளை படத்தின் ரிலீஸ் வைத்துக் கொண்டு திரையரங்குகளை ஒதுக்குவதில் பிரச்சனை செய்வதாகவும், தானே நேரடியாக போன் செய்தாலும் எடுப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார். என்னை போன்ற பெரிய நடிகருக்கே இந்த நிலைமை என்பது, அறிமுக நடிகர்களின் படங்கள் எல்லாம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்.

விஷால் என்னவோ சீரியஸ் ஆகத்தான் பேசுகிறார், ஆனால் நமக்குத்தான் நடிகர் சங்க தேர்தலின் போது உள்ள அடிக்கிறாங்கன்னு வெளியே ஓடிவந்த சீன் தான் ஞாபகத்துக்கு வருது. உண்மையிலேயே பிரச்சனை என்றால் அதை பேசி தீர்க்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு படத்திற்கான பிரமோஷன் என்றால், விஷால் சார் கொஞ்சம் அமைதியா இருங்க, வாய்ப்பு கொடுத்த ஹரிக்கும் சேர்த்து ஆப்பு வச்சிடாதீங்கன்னு தான் சொல்லணும்.

Trending News