வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

விஜய்யை வைத்து விஷால் கண்ட கனவு.. அரசியலுக்கு வந்து தலையில் இடியை இறக்கிய தளபதி

Actor Vishal: விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான பிரமோஷனில் அவர் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.

அதில் தன்னுடைய அரசியல் வருகை பற்றியும் அவர் பதிவு செய்திருக்கிறார். அதன்படி நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அப்போது ஒரு பேட்டியில் விஜய்யின் அரசியல் வருகை பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் அவர் வந்ததால் தான் நீங்களும் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளீர்களா எனவும் கேட்டனர்.

விஜய்யை பின்பற்றும் விஷால்

அதை மறுத்துள்ள விஷால் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முன்பிருந்தே இருக்கிறது. அதேபோல் விஜய் அரசியலுக்கு வந்ததில் என்னுடைய கனவும் நிறைவேறாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.

ஏனென்றால் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசையாம். தற்போது விஜய் இன்னும் ஒரு படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார்.

அதனால் என்னுடைய இந்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது என அவர் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய அரசியல் என்ட்ரியின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது கூட விஜய்யை பார்த்து தான். அதே போல் தான் இந்த அரசியல் வருகையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -spot_img

Trending News