இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வரும் ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் விஷால் விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறி ஆசைப்பட்ட தாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கும் மிகப் பெரிய மார்க்கெட் உருவாக காரணமாக அமைந்தது முருகதாஸின் படங்கள் தான். ஒரு காலத்தில் நல்ல நல்ல சமூக கருத்துக்களை சொல்லி வந்த முருகதாஸ் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் சொதப்பி வருகிறார்.
அதுவும் கடைசியாக வெளியான சர்கார், தர்பார் போன்ற படங்கள், இது முருகதாஸ் படம்தானா? என்று யோசிக்கும் அளவுக்கு இருந்தது. எப்போதுமே கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தும் முருகதாஸ் இந்த படங்களில் கோட்டைவிட்டது அனைவருக்குமே அதிர்ச்சிதான்.
அதனால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் முருகதாஸ் அசிஸ்டன்ட் டைரக்டர் திருமுருகன் என்பவருக்கு விஷால் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தை வடஇந்திய நிறுவனம் தயாரிக்க முன்வந்ததாம்.
ஆனால் தமிழில் அவர்களது பேனருக்கு மவுசு இல்லை என்பதால் ஏற்கனவே பிரபலமான ஏ ஆர் முருகதாஸ் பெயரில் படத்தை தயாரித்து வெளியிட முடிவு செய்து முருகதாஸிடம் கேட்டுள்ளனர்.
முருகதாஸோ, தாராளமா எடுத்துக்கலாம் என்று கூறிவிட்டு பின்னால் இரண்டு கோடி மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கூறி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதனால் உஷாரான விஷால், சார் நம்ம கிட்ட என்னமோ எதிர்பார்க்கிறார் போல என வேறு நிறுவனத்திற்கு படத்தை கைமாற்றி விட்டாராம்.