கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் நொந்து போன நடிகர் என்று குறிப்பிட்டால் அது கண்டிப்பாக நம்ம விஷாலாக தான் இருப்பார். பஞ்சாயத்து ஒருபக்கம், பட தோல்விகள் ஒருபக்கம் என துக்கம் தொண்டை அடைக்க புலம்பிக் கொண்டிருக்கிறார்.
விஷால் நடிப்பில் கடைசியாக நடித்த படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துப்பறிவாளன்2 படமும் பாதியில் கைவிடப்பட்டது.
மிஸ்கின் மற்றும் விஷால் இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பில் மிஷ்கின் பொட்டியை கட்டிவிட்டார். இதன் காரணமாக நான் ஏற்கனவே ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் தான் என்ற பெயரில் துப்பறிவாளன்2 படத்தை எடுத்தாராம் விஷால்.
எடுத்தவரை போட்டுப் பார்த்ததில் மிஷ்கின் படம் பாதி விஷால் படம் பாதியாக மாறிவிட்டதாம். டைரக்சன் வரலைனா விட்டு விடலாமே எதுக்கு இதெல்லாம் ட்ரை பண்ணிக்கிட்டு என விஷால் வட்டாரங்களில் அவரை கிண்டல் அடிக்கிறார்களாம்.
ஏற்கனவே படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி கன்னாபின்னாவென செலவாகி விட்டதால் இனி அந்த படத்தை எடுக்க நினைத்தாலும் ஆபத்துதான். கண்டிப்பாக ஓடாது என தெரிந்தும் காசு போட யாருக்குதான் மனசு வரும். மிஸ்கின் மட்டுமே துப்பறிவாளன்2 படத்தை இயக்கியிருந்தால் மிகப்பெரிய படமாக வந்திருக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.
மிஷ்கினுக்கு இதனால் எந்த ஒரு இழப்பும் இல்லை. அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்க முன்னணி நடிகர்களை கமிட் செய்து வைத்துள்ளார். ஆனால் விஷாலுக்கு அடுத்த வெற்றிப்படம் எப்போது வரும் என்ற கேள்விதான் கோலிவுட் வட்டாரங்களில் துளைத்துக் கொண்டிருக்கின்றன.
