திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என்னை மன்னித்து ஏற்றுக்கொள் வரலட்சுமி.. கையை பிடித்து கதறிய விஷால்

தமிழ் சினிமாவில் மிக அதிகம் பேசப்பட்ட காதல் கதைகளில் முக்கியமானது வரலட்சுமி மற்றும் விஷால் காதல் கதைதான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென விஷால் வரலட்சுமியின் காதலை உதறித் தள்ளி விட்டார்.

அதற்கு காரணம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய ஆஃபர் கிடைத்ததுதான் என அப்போதே பல பத்திரிகைகளில் எழுதினார். விஷால் வரலட்சுமியை கைவிட்டு சென்றதும் வரலட்சுமி மிகவும் மனமுடைந்து போய்விட்டாராம்.

விஷாலின் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் அதன்பிறகு விஷாலை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அந்த தொழிலதிபரின் மகள் குறுக்கே திரும்ப ஆட்டம் கண்டார் விஷால்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து பக்கமும் அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. வரலட்சுமியை சந்தித்து தன்னுடைய காதலை புதுப்பிக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்துள்ளார்.

அப்படி ஒரு தருணம் கிடைத்த நேரத்தில் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன் எனவும், நான் உண்மையாகவே உன்னை காதலிக்கிறேன் இனி உன்னை விட்டு செல்ல மாட்டேன் என வரலட்சுமியின் கையை பிடித்து சத்தியம் செய்து கொடுத்தாராம் விஷால்.

ஆனால் வரலட்சுமி, காதல் முறிந்தது முறிந்ததுதான், இனி அதைப் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இனிமேல் காதலைப் பற்றிப் பேசத்தான் அழைப்பாய் என்றால் உன்னை பார்க்க கண்டிப்பாக நான் வரமாட்டேன் என கூறிவிட்டாராம். அதன்பிறகு தலைவர் தண்ணியில் தள்ளாடியதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

vishal-varalaxmi
vishal-varalaxmi

Trending News