புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விடை தெரியாமல் முழிக்கும் விஷால்.. இக்கு வைத்து இழுத்து விட்டு ரசிக்கும் சைக்கோ

Actor Vishal: விஷாலை பொருத்தவரை சர்ச்சைக்கும் பிரச்சினைக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு ஏதாவது விஷயங்களை பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கக் கூடியவர். இதனாலையே பட வாய்ப்புகளை இழந்து, கிடைக்கும் ஒன்னு ரெண்டு படங்கள் மூலம் நடித்து வருகிறார். நடித்த படங்களும் பெருசாக ஹிட் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மட்டும் ஹிட்டானது.

அதற்கும் காரணம் எஸ்ஜே சூர்யா நடிப்பு தான் என்று பேசப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன நான் ஒரு வெற்றி பெற்ற ஹீரோவாக முத்திரை பதித்து விட்டேன் என்று விஷால் காலரை தூக்கிக்கொண்டு கெத்தாக அலைகிறார். இருந்தாலும் தற்போது வரை எந்த படங்களும் கைவசம் இல்லை. அதனால் எப்படியாவது இன்னொரு வெற்றி படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

இதற்கிடையில் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக சொல்லி வந்தார். ஆனால் அதற்குள் விஜய் அரசியலில் பிசியாக விட்டதால் கண்டிப்பாக அந்த சான்ஸ் விஷாலுக்கு கிடைக்காது என்று தெரிந்து விட்டது. இதனால் கிடப்பில் போடப்பட்ட துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை வைத்து ஓட்டி விடலாம் என்று முயற்சி செய்கிறார்.

Also read: விஷால் சினிமாவுக்கு வர காரணமா இருந்த ஆக்சன் ஹீரோ..  ஆறடி தம்பியை வளர்த்து விட்டு அட்ரஸ் இல்லாமல் போன பிரபலம் 

இப்படத்தை ஆரம்பத்தில் மிஸ்கின் தான் எடுத்து வந்தார். ஆனால் இவருக்கும் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் ஈகோ பிரச்சினையால் படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த படத்தை நான் எடுத்து வெளியிடுவேன் என்று விஷால் இயக்கி தயாரித்து வருகிறார். ஆனால் இப்படத்தை இக்கு வைத்து ஆரம்பித்தது மிஷ்கின் என்பதால் பாதி விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறாராம்.

இதனால் எப்படி முடிப்பது என்று தெரியாமல் தட்டு தடுமாறி கொண்டு முழித்து வருகிறார். இதையெல்லாம் தெரிந்தும் மிஸ்கின், விஷாலுக்கு இதெல்லாம் தேவைதான் என்று வேடிக்கை பார்த்து ரசித்து வருகிறார். தற்போது வரை விஷாலுக்கு வேறு எந்த படங்களும் இல்லாததால் இந்த படத்தை எப்படியாவது முடித்துவிட்டு இந்த வருடத்துக்குள் இதை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று பல இயக்குனர்களிடம் உதவி கேட்டு வருகிறார்.

இருந்தாலும் ஆணிவேர் மிஸ்கின் இடம் தான் இருக்கிறது என்பதால் விடை தெரியாமல் விஷால் இருக்கிறார். இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்து துப்பறிவாளன் இரண்டாம் பாகம் வெளிவர வேண்டும் என்றால் மிஸ்கின் மனசு வைத்தால் தான் முடியும் என்பதற்கு ஏற்ப நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இதை எப்படி விஷால் சரி செய்யப் போகிறார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Also read: விஷால் கல்யாணம் பண்ணாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா.? உடம்பில் இவ்ளோ பிரச்சனையா, உதவி செய்யும் சிம்பு

Trending News