ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நெருப்பாய் இருக்கும் கோபத்தை வெளியில் காட்டாத விஷால்.. பொதுவெளியில் இருவரும் காட்டாத முகம்

கோலிவுட்டில் சில காலமாக ரஜினி, விஜய் சூப்பர்ஸ்டார் பிரச்சனை, தனுஷ், சிவகார்த்திகேயன் ஈகோ பிரச்சனை என தொடர்ந்து பல பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் தான் உள்ளது. அந்த வகையில் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இருவருக்கும் உள்ள பிரச்சனையும் தொடரும் கதைதான். அதற்கான காரணம் துப்பறிவாளன்2 படத்தை எடுக்கும் போது ஏற்பட்ட மோதல் தான் இன்று வரை ஓயாமல் உள்ளது.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அணு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் துப்பறிவாளன். மர்மமாக நடக்கும் கொலைக்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் துப்பறிவாளராக விஷால் இப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க விஷால் மற்றும் மிஷ்கின் ஆயத்தமாகினர்.

Also Read:  மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துக் கொண்டிருந்தபோது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் பண பிரச்சனை ஏற்பட்டு மிஷ்கின் அப்படத்திலிருந்து விலகினார். இதை தொடர்ந்து மிஷ்கினும் பொதுமேடையில் விஷாலை பொறுக்கி என ஆதங்கத்துடன் திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். விஷாலும் அவரது தரப்புக்கு, என் பணமெல்லாம் மிஷ்கினால் வீணாக போய்விட்டது என புலம்பி தள்ளினார்.

இப்படி இருவரும் கடந்த 3 வருடங்களாக சண்டையில் உள்ள நிலையில், இயக்குனர் மிஷ்கின் திடீரென விஷாலை எனக்கு பிடிக்கும், அவர் மீது கோபம் இருந்தாலும் அவர் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எனது ஆசை என பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த வகையில் அண்மையில் நடிகர் விஷால் அவரது 46வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பிறந்த குழந்தைகளுக்கு சில உதவிகளை வழங்கினார்.

Also Read: என் குழந்தை இங்க தான் பிறக்கும்.. குண்டைத் தூக்கிப் போட்ட முரட்டு சிங்கிள் விஷால்

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என்னுடைய குழந்தை கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் தான் பிறக்கும் என தெரிவித்தார். மேலும் மிஷ்கினுக்கும், இவருக்கும் இருக்க கூடிய பிரச்னையை பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பியதையடுத்து, அவர் எப்போதுமே எனது அண்ணன் என சிரித்த முகத்துடன் விஷால் பதிலளித்தார்.

மேலும் நான் இயக்கி வரும் துப்பறிவாளன்2 படத்தின் கதை அவருடையது தான் என்றும் எங்களுக்குள் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார். இப்படி இவர்கள் இருவரும் பல வருட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி வந்தாலும், இருவரின் மனதிலும் நெருப்பாக இருக்கும் கோபம் இன்னும் அணையாமல் தான் உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Also Read: நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Trending News