சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஜெயிக்கிற லாஜிக்கை ஒரு வழியாக கண்டுபிடிச்ச விஷால்.. விட்டுக் கொடுத்து கெட்டுப் போகாத மார்க் ஆண்டனி

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று ரிலீஸான மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, ரிதுவர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் கேங்ஸ்டர் மற்றும் டைம் ட்ரேவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் ட்ரைலர் பலருக்கும் குழப்பமாகவே அமைந்தது.

இதனிடையே இப்படம் எப்படி இருக்கும் என பார்க்க போன ரசிகர்களுக்கு இப்படம் புது ட்ரீட்டாக அமைந்துள்ளது. மார்க் மற்றும் ஆண்டனி என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால், அப்பா விஷால் தான் தனது அம்மாவை கொன்றுவிட்டார் என்ற பகையில் மகன் விஷால் எஸ்.ஜே. சூர்யாவுடன் வாழ்ந்து வருவார். ஒருகட்டத்தில் காலத்தை மாற்றும் டைம் ட்ரேவல் டெலிபோன் மகன் விஷாலிடம் கிடைக்கிறது.

Also Read: பல தோல்வியால் மூச்சு திணறிய விஷால், மார்க் ஆண்டனியாக தல தப்பினாரா.? முழு விமர்சனம்

இதைக்கொண்டு இறந்தக்காலத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளும் விஷால் தன் அம்மாவை கொலை செய்தது தனது அப்பா இல்லை என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன் பின்னர் இப்படத்தில் வேறு என்னென்ன நடந்தது என்பதை சுவாரசியமாகவும், ரசிக்கும் வகையிலும் இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே நடிகர் விஷால் பல வருடங்களாக பெருந்தோல்வியை சந்தித்த நிலையில், இப்படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

பொதுவாக விஷாலின் படங்களில் மற்ற நடிகர்கள் தன்னை விட ஸ்கோர் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். இவர் நடிக்கும் படத்தில் வில்லனை காண்பித்தால் கூட விஷாலுடன் சேர்த்துதான் காண்பிக்கப்படும். அந்த அளவுக்கு படத்தின் 98 சதவிகித காட்சிகளில் விஷால் தான் வருவார். இதன் காரணமாகவே இவரது பாடங்கள் பெரிதாக ரசிகர்களிடம் போய் சேரவில்லை.

Also Read: திரும்பவும் அனகோண்டாவை வைத்து கல்லா கட்ட நினைக்கும் விஷால்.. மார்க் ஆண்டனிக்கு சத்தமாய் ஊதிய சங்கு

காரணம் ரசிகர்களை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் படங்களில் சில மசாலாக்களையும், மற்ற நடிகர்களின் நடிப்பையும் பார்க்க நினைப்பார்கள். இது விஷால் படத்தில் இல்லாததால் இவரது படங்களை ரசிகர்கள் வாவேற்க மாட்டார்கள். ஆனால் இந்த ஒரு விஷயம், தெரிந்துமே விஷால் தனது ஈகோ காரணமாக அவரை தவிர வேறு யாரையும் முன்னிலைப் படுத்தமாட்டார். ஆனால் இந்த நிலை, தற்போது மார்க் ஆண்டனி படத்தில் முற்றிலுமாக மாறுப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷாலின் காட்சிகளை விட நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இவரது டையலாக்குகள், ஆக்ஷன் உள்ளிட்டவை இப்படத்தில் பெருமளவு இடம்பெற்ற நிலையில், படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக அமைந்தது. இதனிடையே 20 வருடங்களில் நடிகர் விஷால் ஒருவழியாக தனது ஈகோவை விட்டுக்கொடுத்து மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளார்.

Also Read: சிக்கி சின்னா பின்னமாகி வெளிவந்த மார்க் ஆண்டனி.. தேறுமா, தேறாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News