செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தீர்ப்பு வழங்கும் நாட்டாமையாய் மாறிய விஷால்.. பழைய கெட்ட பெயர்களை எல்லாம் சரி செய்த குட் பாய்

விஷால் ஆரம்ப காலத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர். இவர் சினிமாவிற்குள் நுழைந்த நேரத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியாக தான் அமைகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவருடைய ஓவர் ஆட்டிட்யூட் தான்.

அதாவது இவர் எப்பொழுது நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரோ அப்போதே இவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. படங்களில் மட்டுமல்லாமல் இவர் கூட இருந்த நண்பர்களாலும் அதிகமான சர்ச்சையில் சிக்கினார். இதனால் தொடர்ந்து படத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் கொஞ்சம் மௌனம் காத்து வந்தார்.

Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?

இதையெல்லாம் கடந்து கொஞ்ச நாட்களாகவே ரொம்பவும் மாறி போய்விட்டார்.  இவரிடம் இருந்த பழைய கெட்ட பெயரை எல்லாம் அழித்துவிட்டு ரொம்ப நல்ல மனிதராக நடந்து கொள்கிறாராம். அதனாலேயே இவருடைய படப்பிடிப்பு இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அவர்களிடம் இருந்து பல கதைகளை கேட்டு வருகிறாராம்.

ஏற்கனவே ஒரு சில படங்களில் நண்பர்களால் அடிபட்ட இவர் மிகவும் அவமானத்தை சந்தித்தார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத இவர் இப்பொழுது அந்த படத்தில் வேலை செய்த மற்ற கலைஞர்களுக்கு நியாயம் கிடைக்கும்படி செய்து வருகிறார். இந்நிலையில் விஷால், கார்த்திக் தங்கவேலுடன் அடுத்த படம் கமிட்டாகி இருக்கிறார்.

Also read: கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு படத்தை எடுத்தவர். மேலும் விஷால் நடிக்கும் இந்தப் படத்தை  ஆடுகளம் கதிரேசன் தயாரிக்க இருக்கிறார். இதற்கிடையில் இப்பொழுது இவர்கள் இருவருக்கும் கேமராமேன் சம்பந்தமான ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதனால் இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக விஷாலிடம் தீர்ப்பை கேட்டு நாடி இருக்கிறார்கள்.

இப்பொழுது விஷாலும் நல்ல மனுஷனாக மாறிவிட்டதால் அவரிடம் பஞ்சாயத்துக்கு போயிருக்கிறார்கள். அவரும் இதன் மூலம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நிரூபிப்பதற்காக சரியான முறையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பித்து முடிவு சொல்லி இருக்கிறார். இதனால் இப்பொழுது இவரிடம் பழைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக பஞ்சாயத்துக்கள் தேடி வருகிறதாம்.

Also read: அடி மேல அடி மேல அடிவாங்கும் விஷால்.. நம்பிய நண்பர்களால் வந்த பெரும் சோதனை

Trending News