புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தை முடித்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில் விரைவில் டைட்டில் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் விஷால் வில்லனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விஷால் விலகி விட்டார். மேலும் அவருடைய லத்தி படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

Also Read : விஜய்க்கு வாரிசு படத்தில் பிடித்த 3 விஷயம்.. பார்த்து பார்த்து செதுக்கிய வம்சி

விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சரிவர போகவில்லை. அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்தில் ஆரம்பத்தில் இருந்த நல்ல பெயரும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக போய்விட்டது. அதுமட்டுமின்றி அரசியலில் வருவேன் என்று சொல்லி அதிலும் அவப்பெயர் வாங்கிக் கொண்டார்.

இப்படி விஷால் சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு ஏழரை அவரை தொடர்ந்து தான் வருகிறது. இந்த சமயத்தில் லத்தி பட விழாவில் லோகேஷை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, நானும் விஜய்யின் படத்தை இயக்குவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். விஷாலை நம்பி விஜய் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா.

Also Read : விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகாத அம்மா சென்டிமென்ட்.. மம்மி ஷோபாவை 20 தடவை பார்க்க வச்ச படம்

இதுவரை ஒரு படத்தை இயக்கிய முன் அனுபவம் கூட விஷாலுக்கு இல்லை. துப்பறிவாளன் 2 படத்தில் மிஸ்கினுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக விஷாலே இயக்கி வருகிறார். இந்த படம் வெளியானால் தான் அவரது இயக்கம் எப்படி இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு தெரியவரும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் படத்தை இயக்குவேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஒருவேளை விஜய்யின் சினிமா கேரியரின் சோலியை முடிப்பதற்காக இவ்வாறு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறாரோ என்றும் பலரும் கூறி வருகிறார்கள். விஷால் படத்தில் விஜய் நடிப்பது சாத்தியமில்லாத ஒன்றுதான்.

Also Read : 21 வருடம் கழித்து, ரெண்டே நிமிடத்தில் மனதை உருக்கிய சித்ராவின் குரல்.. வாரிசுவின் வைரலாகும் அம்மா பாடல்

Trending News