திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இங்க பருப்பு வேகல, அக்கட தேசத்து அரசியலுக்கு அடி போடும் விஷால்.. கைநழுவி போன கனவு நடக்குமா?

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கும் விஷாலுக்கு அரசியலில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதன் முன்னோட்டமாகவே நடிகர் சங்க தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து ஆர்.கே நகர் தொகுதியிலும் போட்டியிட விண்ணப்பித்தார்.

ஆனால் அது சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் எப்படியாவது அரசியலில் கால் பதித்து விட வேண்டும் என்று அவர் இப்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை குறிப்பு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read: விஜய்யிடம் பேசி தந்திரமாக காய் நகர்த்தும் சங்கத்து ஹீரோ.. ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் விடமாட்டாரு போல

ஏற்கனவே இதன் முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்தது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் உருவ ஒற்றுமை இல்லாத மம்முட்டியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தது தான். இது சில அதிருப்தியையும் கிளப்பியது.

இருப்பினும் அந்த பெரிய மனிதரின் வாழ்க்கை குறிப்பை வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். இதில் தான் விஷால் இப்போது நடிக்க இருக்கிறாராம். இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏற்கனவே முதல் பாகம் உருவ ஒற்றுமை காரணமாகவே தோல்வி அடைந்தது.

Also read: விஷ்ணு விஷாலை ஓரம் கட்டிய இளம் நடிகர்.. அதிக பேராசையால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போச்சே

அந்த வகையில் தற்போது விஷால் அந்த கேரக்டருக்கு பொருந்த மாட்டார் என்ற கருத்தும் எழுந்துள்ளது. மேலும் அவரை மாற்றிவிட்டு வேறு ஹீரோவை போடுங்கள் என பலதரப்பு ரசிகர்களும் கூறி வருகின்றனர். ஆனாலும் விஷால் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதை வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் விட்டதை அவர் ஆந்திராவில் பிடிக்கப் போகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனாலும் இங்கு வேகாத பருப்பு அங்காவது வேகுமா என்ற கேள்வியும் எழ தவறவில்லை. அந்த வகையில் அக்கட தேசத்து அரசியலுக்கு அடி போடும் விஷாலின் கனவு நனவாகுமா அல்லது நமத்து போன பட்டாசாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

Trending News