vishal will committed next film after taking revenge of thupparivaalan-2: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், திரைத்துறையில் பல முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்ஆகவும் இருக்கும் விஷால், தற்போது வாண்டட் ஆக சென்று வம்புகளில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த ரத்னம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் பின்னோக்கி சென்றது.
இந்த படத்தில் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று வீர வசனம் பேசி, விநியோக உரிமையை கைப்பற்றிக் கொண்ட விஷால், எதிர்பார்த்த வசூலை அடைய முடியாமல் போதிய லாபமின்றி விழி பிதுங்கி நிற்கிறார்.
சில இடங்களில் விஷாலின் ரத்னம் படத்தை வெளியிட முடியாதபடி சிலர் சூழ்ச்சி செய்வதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார் விஷால்.
மீண்டும் இணைய உள்ள மருது கூட்டணி
2016 ஆண்டு விஷாலுடன் இணைந்து மருது என்கிற வெற்றி படத்தை கொடுத்த கொம்பன் முத்தையா அவர்கள், மீண்டும் விஷாலுடன் இணையும் பொருட்டு ஆக்ஷன் உடன் கலந்த தரமான கிராமத்துக் கதையை கூறியுள்ளார்.
கதை பிடித்த போதும் தான் கொண்ட கொள்கையில் பின்வாங்காமல் இருக்கும் விஷால் அவர்கள், இப்போதைக்கு முத்தையாவை காத்திருக்க சொல்லிவிட்டு துப்பறிவாளன் 2 படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார்
2017 இல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த விறுவிறுப்பான துப்பறிவாளன் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன், வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றியின் பயனாக அடுத்த பாகத்தையும் இயக்க தொடங்கினர்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் 2, படப்பிடிப்பு தொடங்கி 30 நாள் சூட்டிங் முடிவடைந்த நிலையில் விஷால் மற்றும் இயக்குனருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த விஷால், துப்பறிவாளன் 2 படத்தின் கதைக்காக மிஷ்கினுக்கு நன்றி சொல்லிவிட்டு, தானே இயக்கத்தை கையில் எடுத்தார்.
ரத்னம் படத்தை முடித்த கையோடு, துப்பறிவாளன் 2 படத்திற்கான லொகேஷன் பார்ப்பது, துணை நடிகர்கள் நடிகைகளை தேடுவது போன்ற ஆடிஷன்களில் ஈடுபட்டார்.
கூடுதல் தகவலாக, ஆக்சன் கிங் அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பான் இந்தியா மூவியாக உருவாவதால் தென்னிந்திய நட்சத்திரங்கள் சிலரையும் இதில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் விஷால்.
ஜூன் மாதம் துப்பறிவாளன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், படப்பிடிப்பு முழுவதும், குறிப்பாக லண்டன் முதலான வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது
இதனால் முத்தையாவின் கதை பிடித்திருந்த போதும் துப்பறிவாளன் 2 படத்தை முடித்து விட்டு கால்ஷீட் தருவதாக தெரிவித்துள்ளார் விஷால்