புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஷாலின் லத்தி படத்திற்கு ஏற்படும் சிக்கல்.. நண்பனாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் படும் பாடு

நடிகர் விஷாலுக்கு இப்போது ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டித் தருவதாக வாக்கு கொடுத்த விஷால் தற்போது வரை அந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் உள்ளார். ஒருவேளை சினிமாவில் பிஸியாக இருப்பதனால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ என்ற குழப்பம் இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக விஷாலின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. அதாவது விஷாலால் எல்லா பட தயாரிப்பாளர்களும் பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள். ஏனென்றால் அவர் நடிக்கும் படங்களின் சூட்டிங்க்கு வர மறுக்கிறாராம்.

Also read:எஸ் ஜே சூர்யாவுக்கு தலைவலியாக வந்த விஷால்.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா

இதனால் சில நாட்கள் படப்பிடிப்புக்கான ஏற்பாடு செய்து, பெரும் நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். அப்படி என்னதான் விஷால் பிஸியாக இருக்கிறார் என்று பார்த்தால் வீட்டிலேயே படுத்து தூங்குகிறாராம். இதற்கு நியாயம் கேட்டு தயாரிப்பாளர்கள் அவரது வீட்டுக்கு சென்றால் எனக்குப் பெரிய இடத்தில் செல்வாக்கு இருக்கு என்ற சொல்லி மிரட்டுகிறாராம்.

மற்ற தயாரிப்பாளர்களுக்குத்தான் இந்த நிலைமை என்றால் அவர் தயாரிக்கும் சொந்த படத்தின் சூட்டிங்க்கு கூட விஷால் செல்வது இல்லையாம். இந்நிலையில் விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இருவரும் அவரின் லத்தி படத்தை தயாரித்து வருகிறார்கள்.

Also read:உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

இந்த படம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு போட்டியாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் நவம்பர் மாதமாவது இந்த லத்தி படம் வெளியாகுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் தற்போது வரை விஷால் இந்த படத்திற்கு ஒரு ஸ்டெப்பும் எடுத்த பாடு இல்லையாம்.

லத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் விஷால் நண்பராக இருப்பதால் அவரிடம் கடுமையாகவும் இந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை. இப்படி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாருக்குமே விஷால் குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆனால் எப்போதுதான் லத்தி படம் வெளியாகும் என விஷாலின் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Also read:பாக்கியராஜ்க்கு ஆப்பு வைத்த விஷால்.. இப்ப எல்லாம் நாங்க தான்

Trending News