ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்

Vishal-Mark Antony Collection: ஒரு வெற்றி கிடைத்து விடாதா என்று ஏங்கி வந்த விஷால் இப்போது செம ஹேப்பி மூடில் இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி தற்போது வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆக்சன், காமெடி, கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இருந்த இப்படம் இப்போது ரசிகர்களின் அமோக வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இதற்கு எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் ஒரு காரணம். முதல் நாள் வந்த விமர்சனத்திலேயே அது வெளிப்படையாக தெரிந்தது.

Also read: மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்களும் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். அதன் காரணமாகவே அடுத்தடுத்து வந்த நாட்களில் இப்படத்திற்கான வசூல் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் முதல் நாளிலேயே உலக அளவில் மார்க் ஆண்டனி 11.55 கோடி வரை வசூலித்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் 13.9 கோடியையும் தட்டி தூக்கி இருந்தது. மேலும் மூன்றாவது நாளில் 15 கோடியும் நான்காவது நாளில் 10 கோடியும் வசூலாகி இருக்கிறது. ஆக மொத்தம் படம் வெளியான 4 நாட்களிலேயே 50 கோடியை தாண்டி கலெக்சன் பார்த்துவிட்டது.

Also read: விஷால் சொந்த செலவில் சூனியம் வைத்த 10 படங்களில் 5 வெற்றி.. மார்க் ஆண்டனி படத்தை தவறவிட்டது தப்பா போச்சு.!

இது இப்போது ஒட்டுமொத்த படகுழுவினரையும் சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது. அது மட்டுமின்றி வார நாட்களாக இருந்தாலும் திரையரங்குகளில் மார்க் ஆண்டனியை காண கூட்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதனாலேயே அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இப்படியே சென்றால் இந்த வார இறுதிக்குள் மார்க் ஆண்டனி 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல வருடங்களாக தோல்வியை பார்த்து வந்த விஷாலுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான்.

Also read: அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

- Advertisement -

Trending News