வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

Vishal-Vijayakanth: கடந்த ஆண்டின் இறுதி நமக்கு சொல்ல முடியாத துயரத்தை கொடுத்தது. கேப்டன் மறைவின் இழப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் அவருடைய சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் அவருடைய இறப்புக்கு வராத நடிகர், நடிகைகள் நினைவிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்ற கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் ஓரிரு நாட்களிலேயே விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆனால் விஷால் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு இப்போது தான் புத்தாண்டு மயக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பி இருக்கும் அவர் ஆர்யாவுடன் விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Also read: 5 வருட தோல்வி, விஷாலை தூக்கி விட்ட இயக்குனர்.. முதல் ஆளாக அனகோண்டா செய்த வேலை

அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. மேலும் விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் கண்ணீர் மல்க மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியதை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு வலுவான காரணமும் இருக்கிறது.

அதாவது விஷால் அஞ்சலி செலுத்திய கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் விஜயகாந்த் சாமி மாதிரி. கடைசியாக அவருடைய காலை தொட்டு கும்பிடும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என ஒரு பெர்ஃபார்மன்ஸ் போட்டார்.

மேலும் நினைவிடத்தில் ஆர்யாவுடன் இணைந்து அவர் அன்னதானமும் வழங்கினார். இதைத்தான் நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர். இவ்வளவு வருத்தப்பவர் இறந்த செய்தி கேட்டு உடனே வர வேண்டியதுதானே. இப்ப வந்து எதுக்கு இந்த நடிப்பு என அவரை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

Also read: ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி

Trending News