வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஐட்டம் டான்ஸ் ஆடியதால் விஷால் அண்ணிக்கு நேர்ந்த கொடுமை.. நேக்கா எஸ்கேப் ஆன சம்பவம்

Actress Shreya Reddy: விஷால் முன்னணி நடிகராய் நடித்த எண்ணற்ற படங்களில் சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன் போன்ற படங்கள் இவரின் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது. அவ்வாறு இருக்க, இவரின் அண்ணிக்கு சினிமாவில் நேர்ந்த கொடுமை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் ஸ்ரேயா ரெட்டி. தமிழில் சமுராய் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து திமிரு படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம் ஏற்று வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார். இப்படத்தை தொடர்ந்து தான் மேற்கொண்ட நடிப்புக்காக பல படங்கள் வரும் என்று நினைத்த வேளையில் பெரிதளவு பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

Also Read: கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள்.. நா தான் பெருசு என ராஜமௌலின் பிம்பத்தை உடைத்த படம்

அதிலும் குறிப்பாக, திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்ட ஆட்டம் பெரிதாய் பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர்கள் இடமிருந்து வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு அதிர்ச்சியாய், எங்கள் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வரிங்களா என கூப்பிட்டதும் கடுப்பாகி, நேரில் வந்தால் கடுமையாக திட்டி விடுவேன் என கூறிப் போனை வைத்து விட்டாராம்.

மேலும் இவரைப் பார்த்து நடிப்பிற்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை எனவும் கூறினார்களாம். இது எதுவுமே ஒத்து வராத நிலையில் சினிமாவே நமக்கு வேண்டாம் என நினைத்து விஷால் அண்ணனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் ஸ்ரேயா ரெட்டி.

Also Read: 7 முறை தேசிய விருதை தட்டி பறித்த வைரமுத்து.. எந்தெந்த பாடல்களுக்கு தெரியுமா?

சினிமாவில் இவர் நன்றாக நடித்திருந்தாலும் இவரின் உடல், முக அமைப்பைக் கொண்டு, ஐட்டம் டான்ஸ் ஆடவே கூப்பிட்டார்களாம். தான் எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடந்தது ஒன்று என்பதால் சினிமாவை விட்டு ஒதுங்கவே முடிவு எடுத்து விட்டாராம்.

இனியும் இவர்கள் கொடுக்கும் வாய்ப்பை ஏற்று நடித்து வந்தால் ஐட்டம் டான்சர் ஆகவே மாற்றி விடுவார்கள் எனவும் நினைத்து பக்காவாய் காய் நகர்த்தி தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளரான விஷால் அண்ணனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

Trending News