வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மாயாவின் முகத்திரையை கிழித்த அமுல் பேபி.. நடுங்கி போய் நின்ற பூர்ணிமா

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தரமான சம்பவமாக இன்று கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசன் போர்க்களமாக இருக்க, நீதி கேட்கிறேன் என்ற பெயரில் இன்று மொத்தமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்களுடைய முகத்திரையை மற்றவர் மேல் முன்பு கிழித்து வருகிறார்கள்.

எந்த கேஸ் வந்தாலும் அடித்துப் பேசி சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் அமுல் பேபி விஷ்ணு. பூர்ணிமா விஷ்ணுவிடம் நட்பாக பழகிக் கொண்டு இருந்தபோது சொன்ன ஒரு விஷயத்தை இன்று கோர்ட்டு ரூமில் போட்டு உடைத்து பூர்ணிமாவை நடுநடுங்க வைத்து விட்டார்.

பூர்ணிமா கேப்டனாக இருந்தபோது குறிப்பிட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அவர் சாப்பாடு வாங்க கிச்சனில் இருந்த பொழுது பிரதீப் அவரைப் பார்த்து அடல்ட் கன்டன்டில் பேசி இருக்கிறார். அந்த சமயம் மாயா மற்றும் விசித்ரா அந்த இடத்தில் இருக்கிறார்கள். மாயாவுக்கு பிரதீப் என்ன சொல்கிறார் என்று கேட்டது எனவும் அதற்கு மாயா சிரித்தார் எனவும் விஷ்ணுவிடம் பூர்ணிமா சொல்லி இருக்கிறார்.

Also Read:பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு

அதுமட்டுமில்லாமல் பூர்ணிமா மாயாவிடம் இந்த பிரச்சினையை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு மாயா உங்க பிரச்சனையை நீங்கதான் பேசணும் என்று சொல்லி இருக்கிறார். இதை விஷ்ணுவிடம் சொல்லிய பூர்ணிமா எல்லா பிரச்சனைக்கும் குரல் எழுப்பும் மாயா பிரதீப் செய்த தப்புக்கு ஏன் எதுவுமே கேட்கவில்லை என்றும் விஷ்ணுவிடம் சொல்லி இருக்கிறார்.

விஷ்ணு கூண்டில் ஏறி இந்த விஷயத்தை பற்றி பேசியதும் மாயா முகத்தில் ஈ அடவில்லை என்பது போல் திருட்டு மொழி முழித்து கொண்டு இருந்தார். அவர் எவ்வளவு சமாளித்தாலும் இப்படி ஒரு விஷயத்தை நான் சொல்லவே இல்லை என்று மறுக்க முடியவில்லை. இது மாயாவை ரொம்பவும் டென்ஷன் ஏற்றி விட்டது. நீதிபதியாக இருந்த ரவீனாவும் விஷ்ணுவுக்கு ஆதரவாக தீர்ப்பை சொல்லிவிட்டார்.

கோர்ட் ரூம் டாஸ்கை விஷ்ணு சரியாக பயன்படுத்தி சூனிய கிழவிகளின் முகத்திரையை கிழித்து விட்டார். மாயாவின் பேச்சைக் கேட்டு பூர்ணிமா அதிகமாக ஆடிக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவின் ஆட்டத்தால் இந்த வாரம் வெளியில் போகும் நிலைமையில் தான் அவருடைய ஓட்டு எண்ணிக்கையும் இருக்கிறது. பூர்ணிமாவை வெளியே அனுப்பும் பொழுது தான் மாயாவின் உண்மை முகம் அவருக்கு தெரியவரும்.

Also Read:ஆண்டவருக்கு எதிராக இணைந்த முந்தின சீசன் போட்டியாளர்கள்.. பிக்பாஸுக்கே தண்ணி காட்டிய பிரதீப்

Trending News