செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சைக்கோ வில்லனாக மாறி பிராண்டிய விஷ்ணு.. பலியாடான அக்ஷயா, ஆண்டவர் கொடுக்க போகும் தீர்ப்பு

Biggboss 7-Vishnu: பொழுதொரு சண்டையும் நாளொரு சுவாரசியமுமாக நகர்ந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடு ரணகளமாக இருந்தது. எப்போதுமே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாத அந்த நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் அமுல் பேபி விஷ்ணு, அக்ஷயா மீது வைத்த குற்றச்சாட்டு தான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய பக்கம் தான் நியாயம் இருக்கிறது என நினைத்துக் கொண்டு முழு அரக்கனாக மாறி அவர் செய்த அராஜகம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனால் நிச்சயம் இவருக்கு ஆண்டவரின் அர்ச்சனை உண்டு என்ற கருத்துக்களும் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது விஷ்ணு தவறி கீழே விழுந்து விட்டார். ஆனால் தன்னை தள்ளி விட்டது அக்ஷயா தான் என நினைத்துக் கொண்டு அவரிடம் காச் மூச் என்று கத்திய அவர் ஒரு கட்டத்தில் அவருடைய கையைப் பிடித்து முறுக்கி நீ தான் தள்ளிவிட்ட என சைக்கோ தனமாக சத்தம் போட்டார்.

இதனால் பதறிப்போன மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவரை பிடித்து இழுத்து எதுக்கு மேல கைய வைக்கிற என்று கேட்டனர். ஆனாலும் அடங்காத விஷ்ணு நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் என சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் இந்த விஷயத்திற்கும் அக்ஷயாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அது குறித்த வீடியோ இப்போது வைரலாகி வரும் நிலையில் இந்த வாரம் விஷ்ணுவுக்கு குறும்படம் ரெடி என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் அவர் ஐசுவின் கால் தடுக்கி தான் கீழே விழுந்தார். அது கூட வேண்டுமென்று நடக்கவில்லை. விளையாட்டின் போது இது போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால் விஷ்ணு அதை பெரிதுப்படுத்தியது நிச்சயம் தோல்வி பயமாகவும் இருக்கலாம்.

அதற்காக ஒவ்வொரு நாளும் அவர் இதுபோன்ற ஏதாவது ஒரு மூர்க்கத்தனமான நடவடிக்கையில் ஈடுபடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அதனால் ஆண்டவர் இந்த வாரம் சாட்டையை சுழற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக மொத்தம் அக்ஷயாவை பலியாடாக்கிய விஷ்ணுக்கு வார இறுதியில் அதற்கான விடை தெரிய வரும்.

Trending News