வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அர்ச்சனாவை இந்த 6 தகாத வார்த்தைகளால் பஜனை பாடிய விஷ்ணு.. கண்டு கொள்வாரா, கழட்டி விடுவாரா ஆண்டவர்

BB7 Tamil: பிக் பாஸ் வீட்டில் நேற்று இருந்து விஷ்ணு மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே நடக்கும் சண்டை பரபரப்பாக பேசப்படுகிறது. கருத்து மோதல்கள் என்பது அர்த்தமுள்ள வார்த்தைகளோடு இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு இருக்கும். தேவையில்லாமல் யாரால் அதிகமாக கத்த முடியும் என்று ஒருவருக்கொருவர் குரலை உயர்த்தினால் அந்த சண்டைக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்.

அர்ச்சனா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே நடக்கும் பிரச்சனையும் அப்படித்தான் மதிப்பு இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் தேவை இல்லாத ஒரு விஷயத்திற்கு, அதிகமாக குரல் எழுப்பியதோடு, ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு, அடிப்பது போல் முந்தி அடித்துக்கொண்டு வரும் விஷ்ணுவை பார்ப்பதற்கு எரிச்சலாக தான் இருக்கிறது.

Also Read:படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

விஷ்ணுவை யார் நினைத்தாலும் சில நொடிகளிலேயே கோபப்படுத்தி விடலாம். தன்னை மிகப்பெரிய ஸ்டார் பிளேயராக நினைத்துக் கொண்டு விஷ்ணு உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய நடவடிக்கைகள் நமத்து போன பட்டாசாகத்தான் பார்வையாளர்கள் கண்ணுக்கு தெரிகிறது. தன்னை ஹீரோ போல நினைத்துக் கொண்டு அர்ச்சனாவிடம் அவர் சில தகாத வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறார்.

தகாத வார்த்தைகள் பேசிய விஷ்ணு

விஷ்ணு அர்ச்சனாவிடம், நீ உக்காந்து சீட்டை தேய்க்காத, டாய்லெட் கம்பெனிக்கு வேலைக்கு போ, குப்பை, குப்பை தொட்டி, யூஸ்லெஸ், வேஸ்ட் பேஸ்கட், டம்மி பீஸ், போர்வையை போர்த்திட்டு போய் அழு என்றெல்லாம் பேசி இருக்கிறார். கூல் சுரேஷ் விஷயத்தில் உரிமை குரல் தூக்கிய யாருமே இந்த சண்டையில் உள்ளே நுழைந்து சமாதானப்படுத்தவே இல்லை.

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப் விஷயத்தில் கதறிய மாயா மற்றும் பூர்ணிமா விஷ்ணு, அர்ச்சனாவிடம் எல்லை மீறும் பொழுது அந்த இடத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டு நின்றது அருவெறுப்பின் உச்சம். விசித்ரா மட்டும் விஷ்ணுவை தடுக்க முயன்று இப்படி எல்லாம் செய்யாதே என்று சொன்னது கொஞ்சம் கண்ணியமாக இருந்தது.

பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று சொன்ன கமல் இந்த வாரம் விஷ்ணுவை கண்டிப்பாக கேள்வி கேட்டே ஆக வேண்டும். கமல் அதை பற்றி பேசுவாரா, இல்லையா என்பதுதான் மிகப்பெரிய சந்தேகம். நிக்சன், வினுஷாவை பற்றி பேசியதையே கமல் கண்டு கொள்ளவில்லை அர்ச்சனாவுக்கு நீதி கிடைக்குமா என வார இறுதியில் பார்க்கலாம்.

Also Read:புளுகுமூட்டை! மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த வனிதா.. ஆதாரத்துடன் வச்சு செய்யும் பிரதீப் ஆர்மி

Trending News