இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள பாலிவுட் படமான ‘ஷேர்ஷா’ 12 தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1999 ல் நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் சாதுர்யமாக செயல்பட்ட கேப்டன் விக்ரம் பத்ரா அவர்களின் பயோபிக்.
கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
கதை – இரட்டையர்களில் ஒருவர் சொல்வது போலவே ஆரம்பிக்கிறது க. துடுக்கான சிறுவனாக இருக்கும் ஹீரோ சிறுவயதிலேயே ராணுவத்தில் சேர விரும்புகிறான். அதுவே அவனது கனவு.
ராணுவத்தில் இருந்தாலும் என்றுமே கிண்டல், கேலி, குசும்பு என இருப்பவர் விக்ரம். பிளாஷ் பேக்கில் இவரது காதல், நிஜத்தில் ராணுவம் சந்திக்கும் தீவிரவாத பிரச்சனை என இரண்டையும் சரி பாதியாக கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
சினிமாபேட்டை அலசல் – தொடங்கிய ஒரு மணிநேரத்தில் அட கமெர்ஷியல் அம்சம் தான் அதிகம் உள்ளது ,என நாம் நினைக்கும் நேரத்தில் இரண்டாம் பாதி படம் வேற லெவல் தான். சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பு, திரைக்கதை, போர் காட்சிகள், விஷ்ணுவர்தனின் இயக்கம் பெரிய ப்ளஸ். பிண்ணனி இசையில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – நம் ராணுவத்தின் கெத்து எப்படி பட்டது என காமித்துள்ளனர் இந்த படக்குழு. கமெர்ஷியல் மசாலாவில் தேசப்பற்றை கலந்த கலக்கல் விருந்து இப்படம் .
சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5