வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஸ்டைலிஸ்ட் இயக்குனருடன் இணைய போகும் அஜித்.. ஆரம்பமே அசத்தலா இருக்கப்போகுது

பில்லா படம் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக உள்ளது. அந்த படத்தின் திரைக்கதை, இசை, அஜித்தின் நடிப்பு என்று எல்லாம் பயங்கரமாக இருக்கும். இன்றளவும் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து பில்லா 2 படத்தை எடுத்தார் இயக்குனர் விஷுனு வர்தன். ஆனால் அந்த படம் பாகம் ஒன்று அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

பில்லா படம் இன்றளவும் முக்கியமாக கொண்டாட யுவனின் இசையும் முதன்மையான காரணாமாக உள்ளது. அஜித்தின் மாஸ் என்ட்ரி-க்கு எந்த இசை இப்போதும் பயன்படுத்த படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் பில்லா 3 வருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் நிச்சயமாக இல்லை என்று கூறிவிட்டார்.

பில்லா இயக்குனருடன் இணைய போகும் அஜித்..

இருப்பினும், அவர் அடுத்து கூறிய பதில் ஒன்று, ரசிகர்களிடம் பயங்கரமான ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை கவனித்து வருகிறார். மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பையும் வேகமாக முடிக்கும் எண்ணத்தில் உள்ளார்.

இதை தொடர்ந்து racing-ல் முழு கவனத்தையும் செலுத்தவிருக்கிறார். அதற்க்கு பின், பிரஷாந்த் நீல் உடன் இணைந்து, KGF 3 மற்றும், அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் நிச்சயமாக யுவன் அஜித் மற்றும் என்னுடைய காம்பினேஷன்-ல் ஒரு ஒரு படம் வரும் என்று கூறியுள்ளார்.

அப்போது கண்டிப்பாக அது மங்காத்தா மாதிரி, அல்லது பில்லா போல ஒரு gangster படமாக இருக்கும் என்று கூறுங்கள் என்று ரசிகர்கள் பயங்கரமாக excite ஆகியுள்ளனர்.

Trending News